பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றொரு பெருவெற்றிகண்டு பாராட்டும் வாய்ப்பும், பரணர்க்குக் கிட்டிற்று.

தமிழகத்தின் அரசியல் அமைப்பினை நன்கு அறிந்த ஆன்ருேர்களுள், தலையாயவர் பரணர், அவர் புகாத அரசவை யோ, அவர் காணுத போர்க்களமோ, தமிழகத்தில் இல்லை எனலாம். அத்துணைப் பரந்த அறிவுடமையால், பல பேரரசர் களையும், அவர்கள் ஆற்றிய அரிய போர் நிகழ்ச்சிகளையும் கண்டு வந்துள்ளார். ஆழ்ந்த அகழிகளால் சூழப்பெற்றுக் கடத்தற்கு அரியவாம் எனக் கருதப்பட்ட, பெரிய பெரிய மதில்களால் சூழப்பெற்ற புறக்கோட்டைகளையும் அழித்து உட்புகுந்து, அவ்வக நாட்டகத்தே மண்டிக்கிடந்த பகை மன்னர்களின் மாநிதிகளைப்? பண்டே நுகர்தற்கு இடமாய் அமைந்த, பகை நாட்டவரின் நனிமிகச்சிறந்த செல்வமென மதிக்கத் தக்கதான் அகன்ற அவ்வரண்களின், வாயிற்கதவு களுக்குப் பின்கை, அவற்றை அழியவிடாமல் தாங்கிக் கிடக்கு மாறு சார்த்தியிருக்கும் க ணே ய ம ர க் காட்சியுடையவும், பகைவர்க்குரிய நாடுகள் பலவற்றையும், தன் உடமையாக்கத் துணைபுரிவனவுமாகிய, தம் இருதோள்களையும் உயரத்துக்கிக், காணுமிடமெங்கும் பிணமலைகளே காட்சிதரும் பொல்லாங்கு மிக்க போர்களத்தின் இடையே நின்று, ைக .ெ கா ட் டி த் துணங்கை ஆடி மகிழ்ந்தும், தாம் அவ்வாறு துணங்கை ஆடி மகிழ்தற்கு ஏற்ற, பெரு வெற்றியைத் தாம் பெறத், தமக்குத் துணைபுரிவார் தம்படை மறவராவர் என அறிந்து, அவரை வாழ்வாங்கு வாழ்விப்பது, தம் நீங்காக் கடமையாம் எனும் கருத்துடையராய்ப், போர்க்களம் புக்கக்கால், வென்று முன் அடி இடுவதல்லது, தோற்றுப் பின்னடி இட்டு அறியா ஆற்றல் மறவராம் அவர்க்கு, அவர் உள்ளம் நிறைவெய்தும் வரை, பெருஞ்சோறு அளித்தல் போலும் பெருஞ்சிறப்பு, பல . புரிந்தும் அவ்வாறு சிறந்த படை பெற்றும், அப்படையின்

{6}