பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பதிற்றுப்பத்து தெளிவுரை


போரடு தானைச் சேரலாத!
மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப்
பொலனணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்
பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே 20
கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்திலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்
தென்னங் குமரியொ டாயிடை
மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே. 25


தெளிவுரை : மலைகளைப்போல அலைகள் உயரமாகக் கிளம்பி மேலே எழுகின்றன. அவ் அலைகளின் வெண்மையான திவலைகள் உடைந்து சிதறுமாறு, காற்றும் அவற்றின் ஊடாகப் புகுந்து மோதிச் சிதைக்கின்றது. விளக்கங் கொண்ட கரிய பெரிய நிறை. சூலைக் கொண்டாற்போலக் கடலும் விளங்குகின்றது. அத்தகு, செறிந்த பெரும் பரப்பைக் கொண்ட கருங்கடலின் நடுவே சென்று, முருகவேளுக்கு அஞ்சியோனாகிய சூரபதுமனும் அக் காலத்தே தன்னுருக் கரந்தானாகி ஒளிந்து கொண்டான். பிறருக்கு அச்சம் தருவோரான அவுண வீரர்கள் பலர். தன்னைக் காவலாகச் சேர்ந்திருக்கச், சூரனைத் தன்னிடத்தே கொண்டதாக விளங்கியது ஒரு மாமரம். அம் மாமரத்தினை, அதுதான் தன் வேரோடும் முற்றவும் அழிந்து வீழ்ந்துபடுமாறு வெட்டி யழித்தனன் விறலோனான முருகப்பெருமான். கடுஞ்சினமும், வெற்றிச் செருக்கும் கொண்டோனாக, அப் பெரும் புகழ்ச் செயலைச் செய்து முடித்தான் முருகவேள். அதன் பின்னர், தனக்குரிய ‘பிணிமுகம்’ என்னும் போர்க்களிற்றின் மேலாக ஏறி அமர்ந்தோனாக, அம் முருகப் பிரான் வெற்றியுலாச் சென்றான். அவனைப் போலவே, நீயும் நின் கடலிடத்துப் பகைவரை வென்றனை; நின் மூதூரிடத்தே களிறேறி வீரம் விளங்க வெற்றியுலாவும் வருகின்றனை!

பகைவரது குருதிக் கறையாலே சிவந்த முனையைக் கொண்டது நின் வாள். அந்த நின் வாளானது, நின்பால் மென்மேலும் வந்துவந்து மோதியவரான பகையரசரின் உடலங்களை எல்லாம் ஊடறுத்துச் சென்று, அவரையெல்லாம் வெட்டி வீழ்த்திற்று. வெல்லுவதற்கு அரியவரான அப் பகையரசரது மார்பகங்கள் நின் வாளாலே பிளக்கப்