பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

பதிற்றுப்பத்து தெளிவுரை

36 பதிற்றுப்பத்து தெளிவுரை

14. சான்ருேர் மெய்ம்மறை!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும், தூக்கு: செந்துக்கு. இதற்ை சொல்லியது: சேரலாதலின் பலவான குணநல மேம் பாடும், போராற்றற் சிறப்பும்.

|தன் படைமறவரை. மெய்புகு கவசத்தைப் போலத்' தான் பேணிக்காக்கும் தன்மையாளன் சேரலாதன் என வியந்து கூறிய င္တူဒန္တီ மெய்ம்மறை என்னும் சிறப்பு நோககி, இப்பாட்டு இப் பெயரால் அழைக்கப்படுவதா யிற்று. சொற்சீர் བྱུ)ཏཱི་ என்பது, அளவடியிற் குறைந்தும், வஞ்சி ஒசையின்றி அகவ்ல் ஒசை பெற்றும் வருவதனை. இங்கு 'அளப்பரியையே' என்னும் இரண்ட்ாவது அடி இவ்வாறு வருதலால் சொற்சீர் வண்ணமும் கூறப்பட்டது. இதனைப் 'பரவற்கண் வந்த செந்துறைப் பாடாண் பாட்டு' எனவும் உரைப்பர். இதனை வாழ்த்தியல்' என உரையாசிரியர் நச்சிளுர்க்கினியர் எடுத்துக் காட்டுவர்.)

கிலம்நீர் வளிவிசும்பு என்ற நான்கின் அளப்பரி யையே! நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை போர்தலை மிகுந்த ஈரைம் பதின்மரொடு

5

துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை அக்குரன் அனைய கைவண் மையையே! அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர்ரீ டழித்த செருப்புகன் முன்பl கூற்றுவெகுண்டு வரினும் ஆற்றும்ஆற் றலையே! 1 O

எழுமுடி கெழீஇய திருளுெமர் அகலத்து கோன்புரி தடக்கைச் சான்ருேர் மெய்ம்மறை! வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின் ஒடுங்கீர் ஓதிக் கொடுங்குழை கணவ! 15