உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறாம் பத்து. முடித்தியென்றது ஈண்டு முன்னிலையேவல்வினை. 16 தடைஇய அமை - பெருத்தமூங்கில். அகூ (ச) நின்ம றம்பாட (அ) வீசியெனக்கூட்டி, நின்மறம்பாடாநிற்க அத னைக் கேட்டிருந்து வீசியெனவுரைக்க. (அ) வீசியென்னும் வினையெச்சத்தினை (சூ) ஆகலென்னும்தொழிற் பெயரொடு முடிக்க. அனையையாகன் மாறேயென்றது அவ்வீசுதற்கேற்றஅத்தன்மை யையுடையையாகையானென்றவாறு. மாறென்பது ஆனென்னும் உருபின்பொருள்படுவதோரிடைச்சொல். அத்தன்மையாவது இன்முகமும் இன்சொல்லுமுதலாயின. • எனையதூஉமென்றது சிறிதுகாலமுமென்றவாறு; உம்மை நெடுங் காலமேயன்றிச் சிறிது காலமுமென எச்சவும்மை. கஉ. நிலந்தப டூஉம் ஏணிப்புலமென்றது நிலவகலம்குறைபட ட் எல்லையையுடைய பாசறையென்றவாறு. என்றது. மாற்றார்பாசறையை. (கங) முரசம் நடுவட் (கஉ) படர்ந்து (க௩) சிலைப்பவெனக் கூட்டி. முரசம் பாசறைநடுவே தான் நின்று தன்னொலி பாசறையெங்கும்படர்ந்து கொண்டு படையை ஏவியொலிப்பவெனவுரைக்க. கச. தோமரம் வினைக்குறிப்புமுற்று, தண்டாயுதம், வலத்தரென்றது வினையெச்ச (கச) நாமஞ்செய்ம்மார் (கரு) இளையரொடெழுதரும் (ககூ) ஒல்லா ரெனக்கூட்டுக. கரு. ஏவல்வியங்கொண்டென்றது இளையரை முன்பு போர்க்குக் கையும் அணியும்வகுப்புழி ஏவித் தாமும் ஏவல்களைச் செய்துகொண்டென்ற வாறு, ஏவலையுடைய வியமென இரண் டாவது விரிக்க. வியம் - ஏவல். (கசு) யானை காணின் (கஎ) நில்லாத்தானையென்றது காலாள்முதலா யினவற்றைத் தரமல்லவென்று கழித்துநின்று று யானைகாணின் நில்லாது செல்லும் தானையென்றவாறு. இச்சிறப்பானே, இதற்கு 'நில்லாத்தானை' என்று பெயராயிற்று. கஎ. இறைகிழவோயென்றது இறைவனாதற்றன்மையையுடையா யென்றவாறு. (கஎ) இறைகிழவோய், நின்னை (க)வள்ளியனென்றுயாவரும் கூறுத லானே நின்னைக் காண்பேன் வந்தேன்; (உ) யான் உள்ளியதனை நீமுடிப்பா யாகவேண்டும்; நின் கண்ணி வாழ்வதாக; (கூ) விறலியர் நின்ம றம்பாட (எ) 12