உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க0அ பதிற்றுப் பத்து. ௪. காஞ்சி சான்ற வயவரென்றது நிலையாமை எப்பொழுதும் உள் ளத்திற் கொண்டிருத்தலமைந்த வீரரென்றவாறு. வனைந்துவரலென்பது ஒருவாய்பாட்டு விகற்பம். கங. அவன் ஓலக்க இருக்கையின்செல்வத்தை நாண்மகிழிருக்கை யெனக் கூறிய சொற்சிறப்பானே, இதற்கு 'நாண்மகிழ்ருக்கை' என்று பெயராயிற்று. கச. தீந்தொடை பாலைக்கோவைகளாகிய வீக்குநிலை. (கரு) பையுளுறுப்பிற் பண்ணுப்பெயர்த்தாங்கு (கசு) அளிக்கும் (கஎ) நனையெனக்கூட்டி எல்லாப்பண்களிலும் வருத்தத்தைச்செய்யும் உறுப்பினை யுடைய பாலைப்பண்கள்பலவற்றையும் ஒரோவொன்றாகப் பெயர்த்துவாசிக்கு மாறுபோலே ஒன்றையொன் றுஒவ்வாத இன்பத்தை உண்டவர்க்குக்கொடுக் கும் பலதிறத்து மதுவெனவுரைக்க. நின்றது. கஎ, கூ. நனையென்றது ஈண்டு மதுவிற்கெல்லாம் பொதுப்பெயராய் மாரியினென்னும் உவமம் மதுக்களில் ஒரோவொன்றைக் கொடுக்கும் மிகுதிக்கு உவமம். கஎ சாறுபடு திருவினென்ற உவமம் அம்மதுக்களைப்பானம்பண் ணுங்காலத்து அலங்காரமாகக் கூட்டும் பூவும் விரையுமுதலாய பொருள்.. களுக்கு உவமம். சாறென்றது விழாவின் றன்மையை; மகிழென்றது மகிழ்ச் சியையுடயை ஒலக்கவிருப்பினை. (ச) வயவர்பெரும,(ரு) வில்லோர்மெய்ம்மறை, சேர்ந்தோர் செல்வ, (கா) சேயிழை கணவ, (கக) பாணர்புரவல, பரிசிலர்வெறுக்கை, (கட்) புகழ்சான்மார்ப, நின் (க௩) நாண்மகிழிருக்கையின் சிறப்பெல்லாம் (கஎ) நின்நனை மகிழின் கண்ணே (க௩) இனிது கண்டேமெனக்கூட்டி வினை முடிவு. செய்க. இதனாற்சொல்லியது, அவ்ன் இலக்கவினோதத்தொடுபடுத்து அவன் செல்வச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (சசு) வாங்கிரு மருப்பிற் றீந்தொடை பழுனிய விடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப் படர்ந்தனை செல்லு முதுவா யிரவல விடியிசை முரசமொ டொன்றுமொழிந் தொன்னார். ரு வேலுடைக் குழூஉச்சமந் ததைய நூறிக் கொன்றுபுறம் பெற்ற பிணம்பயி லழுவத்துத் தொன்று திறை தந்த களிற்றொடு செல்லி (ரு)