உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஎ. எட்டாம் பத்து. கஉக வாழ்நர் - வாழ்பவர்; இடையர். பயத்தானென விரிக்க. கழுவுளாவான் அவ்விடையர்க்குத்தலைவனாய் அக்காலத்துக் குறும்புசெய் திருந்தானொருவன். முன்னர் (கங) எயிலென் றது அவன் தனக்கு அரணாகக் கொண்டிருந்த மதிலினை. கஅ. வேறுபுலம்பதிபாழாகப்படர்ந்தென்றது அக்கழுவுள் தலை மடங்குகையாலே அவனைவிட்டு வேறு திறையிடாக்குறும்பர்நாட்டிலே அந் நாட்டுப்பதி பாழாகச்சென்றென்றவாறு. (கஅ) படர்ந்து (உச) திறைகொண்டுபெயர்தியெனக் கூட்டுக. ககூ. விருந்தின் வாழ்க்கை - நாடோறும் புதிதாகத் தாங்கள் தேடு கின்றபொருள். பெருந்தீரு - முன்னே தேடிக்கிடந்தபொருள். அற்றென வென்றது அற்றதெனக்கருதியென்றவாறு. அற்றதென்பது கடைக்குறை ந்தது. 215. பாசம் பேய். உரு உரவரையும்மடவரையுமென்னும் இரண்டாவது விகாரத்தால் தொக்கது. அறிவு - அவர்களறிவு. உஎ. வாழுமோரென்புழி, உம்மை அசைநிலை. (கங) ஆரெயிற்றோட்டி வௌவி அதனையுடைய (கஎ) கழுவுள் தலைமடங் கையாலே (கஅ) வேறுபுலம்படர்ந்து அவ்வேறுபுலத்து நினக்கு (உக) யானையொடு அருங்கலம் திறையிடார்தம் (ககூ) விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திருவற்றதெனக்கருதித் தன்கள் (உஉ) மெய்ந்நடுக்க மிக்கு நின்னை அணங்கெனக்கருதிப் பலபடப் பரவுதலான், (e ௩) பேய் தான் பற்றினாருயிரைவௌவாது தனக்கு அவர் பலியிட்டுழி அப்பலி கொண்டுபெயருமாறுபோல நீயும் அவருயிரைவெளவாது (உச) திறை கொண்டுபெயராநின்றாய்; இஃதன்றே இதுபொழுது நீசெய்கின்றது; நின்னை (அ) உடற்றியோர் (சு) கடுந்தேறு உறுகிளை துஞ்சும் (எ) கூடுகிளை த்த இளந்துணைமகாரைப்போலப் (அ) பெருமானே, அலந்தார்கள்; இனிமேல் உள்ளத்து (உரு) உரவரையும் மடவரையும் அவரவர் அறிவினைத்தெரிந்து எண்ணி (உச) அவர்களிடத்துச்செய்யும் அருளறிந்து அருளாயாயின், (உஎ) நெடுந்தகாய், இவண்வாழ்பவர்யார்; (உச) நின் ஊ ழி வாழ்கவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. இதனாற்சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புக்கூறி அவற்குப் பகை வர்மேல் அருள்பிறப்பித்தவாறாயிற்று. (பி-ம்) 16 கூ.. செறிவளை. கஅ. வேற்றுப்புலம். கஎ. தலைமயங்க. உஉ. பராலின். (க)