________________
12 நூலாசிரியர்கள் வரலாறு. இவரியற்றிய பாடல்களை உற்றுநோக்குகையில், இவர் குறிஞ் சித்திணையில் மிகப்பயின்றவரென்றும் அதன்வளங்களை விளங்கப் பாடுதலில் மிக்க ஆற்றலுடையவரென்றும் தெரிகின்றன. மேற்கூறிய பாடல்களில் குறிஞ்சித்திணையைச் சார்ந்தவை: அகவல்கள் - கருரு; கலிப்பாக்கள் Do உகூ. இவருடைய வாக்கில் விநாயகக் கடவுள்; முருகக்கடவுள், சிவ பெருமான், பலதேவர், திருமால் இவர்களுடைய துதிகள் வந்திருக் கின்றன. இதனால், இவர் சமயக் கோட்பாட்டிற் பாரதம் பாடிய பெருந்தேவனாரைப் போன்றவராக எண்ணப்படுகிறார். , எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என் னும் முத்தொகுதி நூல்களிலும் இவருடைய பாடல்களும் நூல் களும் கலந்திருத்தல் இவரது பெருமையை விளக்குகின்றது. "அரசவை பணிய வறம்புரிந்து வயங்கிய, மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவி, னுவலை கூராக் கவலையினெஞ்சி, னனவிற்பாடிய நல்லிசைக், கபிலன்" (பதிற்றுப்பத்து, அரு) எனப் பெருங்குன்றூர் கிழாரும், "வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்" (புறநானூறு, ருங) எனப் பொருந்தி லிளங்கீரனாரும், "புலனழுக் கற்றவந்தணாள, னிரந்துசென் மாக்கட் கினியிட னின்றிப், பரந்திசை நிற்கப் பாடி னன்," (ஷை கஉகூ) "பொய்யா நாவிற் கபிலன்" (ஷை கஎச) என மாறோகத்து நப்பசலையாரும் பாடியவற்றைப்பார்க்கையில் இவரு டைய மனம் வாக்குக் காயங்களின் தூய்மையும் அறம்புரி கொள் கையும் பெரும்புலமையும் அன்புடைமையும் நட்பின் பெருமையும் நன்கு விளங்குகின்றன. இவராற் பாடப்பட்டோர் :- அகுதை, இருங்கோவேள், ஓரி, சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன், நள்ளி, மலையமான் திரு முடிக்காரி, விச்சிக்கோன், வேள்பாரி, வையா விக்கோப் பெரும்பே கன் என்பவர்கள். கொல்லிமலை, பறம்புநாடு, பறம்புமலை, முள்ளூர்மலை, முள் ளூர்க் கானமென்பவைகள் இவராற் பாராட்டப் பெற்றிருத்தலின் அவைகள் இவர் காலத்தில் விளக்கமுற்றிருந்தனவென்றும் இவர் பழகிய ங்களென்றும் தெரிகின்றன. நட்பு, வண்மை, நன்றிமறவாமையென்பவைகளை இவருடைய செய்யுட்களிற் பரக்கக் காணலாகும்.