கச பதிற்றுப்பத்து விலங்கல் போறலின், விலங்கலெனப்பட்டது. நாடுகண்டாலொப்பது அம்மதிலையடைந்த விடமென்னின், அவ்விடவணுமைபற்றி அதன் உவமை யை அம்மதில்மேலதாகக் கூறிற்றெனக்கொள்க. துஞ்சுமரமென்றது மதில்வாயிலிற்றூங்கும் இனிக் கழுக்கோலாக நாட்டிய மரமென்பாருமுளர். ச. கணையமரங்களை; ஐயவியென்றது கதவிற்குக் காவலாகப் புறவாயிலே தூக்கப்படும் துலாமரத்தை; அப்புக்கட்டென்பாருமுளர், ஈண்டு மதிலென்றது. உண் மதிலை. (க) கொடுங்கணிஞ்சியையும் (உ) விலங்கலையுமுடைய (ச) மதிலெனக் கூட்டுக. இனி இடையில் விலங்கலென்றதனை மாற்றார் படையை விலங்குதலை யுடையவென்றாக்கி, முன்னின் ற கொடுங்கணிஞ்சியென் றதொன்றுமே மதில தாக ஐயவி தூக்கிய மதிலென் றதனை ஆகுபெயரான் ஊர்க்குப் பெயராக்கி நாடுகண்டன்ன ஊரென மாறியுரைப்பாருமுளர். கங உள்ளலுமுரியளென்றது யான் குறித்த நாளளவும் ஆற்றியிருக்க வென்ற நின்னேவல்பூண்டு நின்னை உள்ளாதிருத்தலேயன்றி நீ குறித்த நாளுக்குமேலே நீட்டித்தாயாகலின், நின்னை நினைத்து வருந்துதலுமுரிய ளென் றவாறு. 15. தாவின்று திருமணிபொருத திகழ்விடுபசும்பொனென். றது வலியில்லையான படியாலே அழகிய மணிகளொடு பொருத ஒளிவிடு கின்ற பசும்பொனென்றவாறு. ஈண்டுத் தாவென்றதுவலி; பொன்னுக்கு வலியாவது உரனுடைமை. இன்றென்பதனை இன்றாகவெனத்திரித்து இன்றாகையாலெனக்கொள்க. என்றது, ஒளியையுடைய மணிகளொடு பொரவற்றாம்படி ஓட்டற்ற ஒளி யையுடைய பசும்பொனென்றவாறு. கரு பூண் பசும்பொன் வயிரமொடு உறழ்ந்து சுடர்வரவெனக் கூட்டி, பூணானபசும்பொன் தன்னிடையழுத்தின வயிரங்களொடு மாறு. பட்டு விளங்கவெனவுரைக்க. புரையோரென் றபன்மையாற் காதன்மகளிர் பலரெனக் - கஅ. கொள்க. கஎ அ. அகலப் பாயலென இருபெயரொட்டாக்கி, அத்தை அல் வழிச்சாரியையென்க, துயிலினியபாயலெனவுரைக்க. அகலத்தை மகளிர்க்குப் பாயலெனச் சிறப்பித்தமையான், இதற்கு துயிலின்பாயல்' என்று பெயராயிற்று. கக, பாலுங்கொளாலும் வல்லோயென் றது அவ்வகலப்பாயலை வேற்றுப்புலத்து வினையில்வழி நின்மகளிர்க்கு வகரக்கொடுத்தற்கு நின்னி
பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/30
Appearance