உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரண்டாம் பத்து. கரு விரியுளை மாவுங் களிறுந் தேரும் வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக் கடிமிளைக் குண்டுகிடங்கி னெடுமதி னிலைஞாயி سا லம்புடை யாரெயி லுள்ளழித் துண்ட உ0 வடாஅ வடுபுகை யட்டுமலர் மார்ப னெமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும் பரிசின் மாக்கள் வல்லா ராயினும் கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன் மன்னுயி ரழிய யாண்டுபல மாறித் உரு தண்ணிய லெழிலி தலையா தாயினும் வயிறுபசி கூ.ர வீயலன் வயிறுமா சிலீயரவ னீன்ற தாயே. ங. துறை - இயன்மொழி வாழ்த்து. உக வண்ணம் - ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் - (உ0) அட்டுமலர்மார்பன். முரணியோரையெனவிரியும் ரண்டாவதனைத் தலைச்சென் றென்பதற்கு இடத்திலே சென்றென்பது பொருளாக்காது முடிவிலே சென்றென்பது பொருளாக்கி அதற்குப் போந்தபொருள் முடிவுசெயலாக்கி அதனொடுமுடிக்க. மேலே (உங) கொடைக்கடனமர்ந்த கோடா நெஞ்சினனென்று கொடைகூறுசின்றான்; ஈண்டு ( ககூ ) ஓம்பாது வீசி யென்று கொடை கூறியதற்குக் காத்தற்குச் சென்றவிடைக் கொண்டவற்றைக் களம்பாடச் சென்றார்க்குக் கொடுக்குங்கொடையென வுரைக்க. ஊர்சுடுபுகை. 2.0. அடா அடுபுகை அட்டுமலர்மார்பனென் றது. பகைவரைக்கொன்று அச்செருக்கானே அகன்றமார்பனென்றவாறு. இச்சிறப்பானே இதற்கு 'அட்டுமலர்மார்பன்' என்று பெயராயிற்று. உக. எமர்க்கும் பிறர்க்குமென நின்றவற்றைக் கொடைக்கடன மர்ந்த வென்பதனோடு முடித்து, எமர்க்கென்றது தன் பாணராகிய வெமர்க் கென்றும் பிறர்க்கென்றது தன் பாணரல்லாத பிறர்க்கென்றுமுரைக்க. உக- உ. பரிசின்மாக்கள் யாவராயினும் வல்லாராயினுமெனக் கூட்டிப் பரிசின்மாக்களென்றதற்கு முன்சொன்ன எமர்க்கும் பிறர்க்கு மெனப்பட்டாரையே யாக்கி யாவராயினுமென்றதற்குக் கண்டார் மதிக்கப்