________________
ஐந்தாம் பத்து. எங கடலொடுழந்தவென்னும் ஒடு வேறுவினையொடு. 'பரதவ' என்றதனாற் சொல்லியது, அக்கடலின் உழத்தற்றொழிலொப்புமைபற்றி அக்கடற்றுறைவாழும் நுளையற்குப்பெயராகிய பாதவனென்னும்பெயரான் இழித்துக்கூறினான்போலக் குறிப்பான் உயர்த்து வென்றிகூறினானாகக் கொள்க. ரு- -௯. தாரத்தையெனவிரித்து (சூ) ஈயமென்பதனொடுமுடித்து, ஈயுமென்னும்பெயரெச்சத்தினைக் (எ) கல்லாவாய்மையனென்னும் காரணப் பெயரொடுமுடித்து அப்பெயரை இக்கவி கூறுகின்றான் பிறர் கூற்றினைக் கொண்டுகூறுதற்கண்வந்த எனவொடுபுணர்த்துக் கடலுட்போர்செய்து அரிதிற்பெற்றபொருளை ஒளிதாக மனங்கொள்ளாப்பாடலையுடைய தரம் போதாதார்க்குக் கொடுக்கும் பேதை இவனென இழித்துக்கூறற்கேற்பக் கைவலிளையர் அடைவே தத்தம் கையைச் சுட்டிநிரைக்கும்படி இரவல ரிடத்து வணங்கியமென்மையெனவுரைக்க. ஆண்டு நீர்ப்போந்துபெற்ற தாரத்தையென்றான், இக்கவிகூறுகின்றான் ; அவ்வுருபிற்குமுடிபாகிய ஈயு மென்றது கூறுகின்றார் கைவலிளையர். அக்கைவலிளையர் கூறிற்றாக இக்கவி கூறுகின்றானுக்குக் கொண்டுகூட்டாகப் புகுந்தமையான், அவ்விரண்டாவ தற்கு அவ்வீயுமென்னும்வினை முடிபாமெனக்கொள்க. இதற்குப்பிறவாறு கூறுப. எ கல்லாவாய்மையனென்றது கல்லாத தன்மையை உண்மையாக வுடையனென்றவாறு. கக. மாலையொடென்னும் ஒடு வேறுவிணையொடு. கக உ. சாந்துபுலர்மார்பவெனக் கூட்டுக. க௪. மலிபுனலையுடைமையின், யாறுமலிபுனலெனப்பட்டது. நிகழ் தருந்தீநீரென்றது அவ்வியாறுகளிலே புதிதாகவருகின்ற இனியபுதுநீ ரென்றவாறு. கரு. பொழில் வதி வேனிற் பேரெழில் வாழ்க்கையென்றது வேனிற்காலத்து மனையில்வைகாது பொழில்களிலேவதியும் பெரிய செல்வ அழகையுடைய இல்வாழ்க்கையென்றவாறு. யிற்று. வேனிற்பொழில்வதியென்க. (கரு) வாழ்க்கையையுடைய (கஎ) ஆயமெனக்கூட்டுக. இச்சிறப்பானே, இதற்கு, 'பேரெழில்வாழ்க்கை' என்று பெயரா இனிப் பொழில்வயவேனிலென்பதுபாடமாயின், பொழில்வயப்படு வதான பொருளுண்டாகிய வேனிலெனவுரைக்க, 10