________________
ஐந்தாம் பத்து. எஎ (அ) பிறழவென்றது முதலாகநின்ற செயவெனெச்சங்களை (க௯) நிர ப்பினையென்னும் பிறவினையோடு முடிக்க. க. பணையாகிய முழங்கொலியென இருபெயரொட்டு. (கா) ஒலியையுடைய (கக) புனலெனக் கூட்டுக. க0. வெரீஇய வேந்தரென்றது தம்பகையை வெருவி இவன்றன் னுடன் நட்பாகிய வேந்தரென்க. க்க. வெருவருபுனற்றாரென்றது தன்னை அடைத்தார் வெருவரத் தக்க புனற்றாரென்றவாறு. இச்சிறப்பானே, இதற்கு 'வெருவருபுனற்றர்' என்று பெயராயிற்று. புன ற்றாரென்றதனைத் தார்ப்புனலென்றவாறாகக்கொள்க, தக உருப்பென் றதனைச் சினத்தீயென்றவாறாகக் கொள்க. ஆதலினென ஏதுப்பொருட்கணின்ற ஐந்தாவதற்கு யான் நின்னை, ஒன்றுகேட்கின்றேனென்று ஒருசொல்வருவிக்க. (ஆசா) சாந்துபுலர (கஎ) வண்ண வேவெனத்திரிக்க. கஅ. மார்புபிணி மகளிரென்றது மார்பா ற்பிணிக்கப்பட்டமகளி ரென்றவாறு. ககூ வதிந்தென்னுமெச்சத்தினைப் (உக) பொழுதுகொளென்னும் வினையொடு முடிக்க. (உo) முயக்கத்துப் (உக) பொழுதுகொண்மரபின் மென்பிணியெ ன்றது முயக்கத்திலே இராப்பொழுதைப் பயன்கொண்ட முறைமையினை யுடைய மெல்லிய உறக்கமென் றவாறு. உ மென்பிணியென்றது புணர்ச்சியவதிக்கண் அப்புணர்ச்சியலையலான் வந்த சிறு துயிலை; கண்ணைப் பூவென்னுநினை வினனாய்ப் பிணியவிழவெனப் பூத்தொழிலாற் கூறினானென்க. உஉ. நாள்பல எவன்கழியுமோவென நாளென்பது வருவிக்க. பின்னின்ற பன்னாளென்பதனைப் (உங) பாசறைமரீ இயென்பத னோடுகூட்டுக. மரீஇயென்பதனை மருவவெனத்திரித்து மருவுகையாலென்க. உசு. பாடரிதியைந்த சிறுதுயிலென்றது இராப்பொழுதெல்லாம் பகைவரை வெல்கைக்கு உளத்திற்சென்ற சூழ்ச்சிமுடிவிலே அரிதாகப் படு தலியைந்த சிறுதுயிலென்றவாறு. (உச) சிறு துயிலையுடைய (உசு) கண்ணெனக்கூட்டுக. (உசு) இயலாது (உரு) இ சையெடுப்புமெனக்கூட்டுக, உரு. இமிழிசையென்றது இமிழிசையையுடைய இயமரங்களை. கோடு-சங்கு. முழங்கென்றது அவ்வியமரங்களுக்கு இடையிடையே முழங்குகின்றவென்றவாறு.