பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


எண்ணிக் கணக்கிட முயன்றும், முடியாததொரு விரக்தியின் முடிவுடன் அவர் வாழ்வின் வேதனேக்கு ஒரு வடிவமாக அங் கிருந்து மனச் சோர்வுகொண்டு நகர்ந்தபோது, விளக்குகளே ஏற்றிவிட்டான் காவல் செய்பவன். என் மனத்திலும் ஒளி விளக்கு ஏற்பட்டு விடுமா?... என் குற்றத்திற்கு நான் சாவ தற்குள் எப்படியும் மன்னிப்புக் கிடைத்தே தீரும்!...ஆம்: இதுதான் வாழ்வின் கியதிபூர்வமான விதியாக இருக்கும்!... இல்லேயென்ருல் அப்புறம் விதிமுன்னே கின்று, தெய்வம் பின் தங்கிவிட மாட்டாதா...ம்...நான் கட்டாயம் பிராயச்சித்தம் அடைவேன்...பகவான் என்னே மன்னித்து அருள்புரிவது நிச்சயம்...! ஆனால்...ஒரு சமயம் எனக்கு என் முயற்சிக் கனவில் தோல்வி சம்பவித்து, முடிவிலே எனக்கு மன் னிப்பே கிட்ட வில்லையானுல்...?’ செந்தில்நாயகம் கின்ற பூமியில் எரிமலை வெடித்து விட்டதோ? மங்களத்தை கினேந்தவர், யாமினியை நினைத்தார். மீண்டும் பழைய வெறி கிளம்பிவிட்டது. என் பாவமும் பொய்யும் என்னே வஞ்சித்துவிட்டால்...? யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் கினேக்கச் சத்துஅற்றவராக ஒர் அரைக் கணம் மெய்ஒடுங்கி நின்ருர். விளக்குகளின் ஒளிமின்னல் அவருக்கு நெஞ்சத் துணிவையும் கன்னம்பிக்கையையும் அளிக்கத் தவருது என்ற அளவில் அவர் தம்முடைய மனத்தை அமைதிப்படுத்திக்கொள்ளப் பாடுபட்டார். அடிக் கொரு முறை அவர் பெருமூச்சுவிட்டுக்கொண்டிருந்தார். அப்போதெல்லாம் தம்முடைய உள்மனம் எதற்காகவோ ஏங்குவது போலவும் அவர் உணரலானர். அப்போது அண்டையிலிருந்த காப்பி ஹோட்டலிலிருந்து பாட்டொன்று மிதந்து வந்தது. பாட்டை உன்னிப்புடன் கேட்டார் செந்தில்காயகம். வழுக்கைவிழத்தொடங்கியிருந்த முன்பக்கத்துத் தலைமயிரைக் கோதியவாறு அவர் நடந்தார். பாரதியின் பாடல் எவ்வளவு அழகான பிரத்யட்ச உண்மையைப் புலப்படுத்துகிறது.