பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
199

ராசாவும் தேவியும் குமாரனும் ம்ந்திரியும் பெத்த பேறு பெறுவார்களென்றவாறு.

4. மாட்டு வைத்தியம்: முடிவு:— உழக்குவேப் பெண்ணை கொண்டு வந்து மூணுவிரல் அகலம் சீலை கிழித்து அந்த எண்ணையில் நனைத்து அந்த மாட்டுக் கொம்பிலே சுத்திக் கொளுத்தி விடவும். ஒருவே கண்ட கொம்பினqலே வெந்த உடனே அவிக்கப் போடவும். கொம்பில்லாத மாட்டுக்கு வேப்பெண்ணை உச்சியிலே காய்ச்சி விடவும்.

5. வைத்திய அட்டவணை

சகம்.1722 இரவுத்திரி ஸ்ரீ மார்கழி 21 சுச்கிலவாரம்.

78
------------
1800 (கி. பி)
----------

முடிவு: ராசமாணில ராசபுஸ்ரீ சரபோசி மகாராசா சாயபு அவர்கள் அக்ஞாபிச்ச பிரகாரம் கலாகிக் கணக்கு வெங்கடேசம் பிள்ளை குமாரன் சுப்பராயன் வைத்திய சாஸ்திரம் அட்டவணை எழுதி முகிந்தது முற்றும் குருவே துணை—

சக்தி குன்மம் 18-க்கும்:

ஒரு தேங்காய் கொண்டு வந்து கண் திறந்து தண்ணீர் ஊத்திப்போட்டு உழக்கு எருக்கம்பால் கறந்து தேங்காயிலடைத்துக் கண்ணுமடைத்து ஒரு அடுக்கில் ஒடு கருகச்சுட்டு அரைச்சு ஒரு பாக்களவு தின்னப் பதினெட்டுகுன்மமும் பொருமலும்நிற்கும்.

—கை கண்டது

6. கயிலை வாசகம் (காளயுக்தி தை-1) 1818:—என்னுடைய சரீரத்து மாங்கிஷத்தைப் புசித்தும் பசியாறுமையா என்று வேண்டிக் கொள்ள, இப்படிப் பசுவும் புலியும் வாதாடிக்கொண்டிருக்கிற சமயத்திலே ரிசப வாகனத்திலே கைலாச வாசனாயிருக்கப்பட்ட ஆதி பரமேசு