பக்கம்:பனித்துளி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பனித்து கிளி

படித்துச் சம்பாதித்து நடத்தப் போகும் தனி வாழ்வு சிறப் புடையதா என்ன?’ என்று நினைத்துப் பார்த்திருக்கிறாள். இந்தக் காலத்துப் பெண்களின் போக்கு அவள் மனத்துக்கு ஒன்றும் புரியவில்லை.

காமுவைப் போன்ற பெண்கள் இரண்டு குழந்தைகளுடன் தெருவில் போகும்போது அவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விடுவாள் விசாலாட்சி. அடுத்த வீட்டுப் பெண் நொடிக் கொருதரம் ‘என் ஆத்துக்காரருக்கு இது பிடிக்கும், அது பிடிக்கும்’ என்று அன்புடன் சமைப்பதைப் பார்த்து அவள் ஏங்கி இருக்கிறாள். கொடிய கூடியரோகக் கிருமிகளை விட மனோ வியாகூலம் மனத்தை இன்னும் துரிதமாகத் துளைத்து விடக் கூடியது. விசாலாட்சியும் அதற்குத்தான் இலக்காகிக் கொண்டிருந்தாள். -

மெலிந்து சோகமே உருவாக உட்கார்ந்திருக்கும் தாயைப் பார்த்ததும் காமுவின் கண்களில் பலபலவென்று நீர் வழிந்தது. - H

‘அம்மா! நீ இப்படியெல்லாம் மனசை அலட்டிக் கொள்ளக்கூடாது. என்னை உன் பிள்ளை என்று நினைத்து கொள்ளேன்” என்று காமு வாத்ஸல்யத்துடன் கூறிவிட்டுத் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். தாயின் மனம் மேலும் துயரத்தில் ஆழ்ந்தது.

விடியற்கால வேளை. கிழக்கே அருணோதயம் ஆகிக் கொண்டிருந்தது. வசந்த காலமாதலால் மரங்கள்ெல்லாம் புஷ்பித்து கம்’மென்று வாசனையை எழுப்பிக் கொண் டிருந்தன. சம்பகம் துளசி மாடத்தை மெழுகிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். முதல் நாள் இரவைப் பற்றி நினைத்தாலே அவளுக்கு உடம்பு ஒரு தரம் நடுங்கியது.

முதல் நாள் மாலை, சங்கரன் காரியாலயத்திலிருந்து வருவதற்கு முன்பே நீலா எக்ஸிபிஷன் பார்க்கத் தன் சி கிதிகளுடன் புறப்பட்டு விட்டாள். அவள் உடுத்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/104&oldid=682199" இலிருந்து மீள்விக்கப்பட்டது