பக்கம்:பனித்துளி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 111

‘நம் இரண்டு பேருக்கும்தான் ஒருத்தர் மேல்

ஒருத்தருக்கு அக்கறை இல்லையே. உங்களுக்காவது உங்கள் மதனி பேரில் அன்பு பொங்கி வழிகிறது!”

“ஆமாம், பாவம்! அவளைப் பார்த்தால் எனக்கு இரக்கமாகத்தான் இருக்கிறது. பாவம்!” என்று சங்கரன் தொண்டை கரகரக்கக் கூறின்ான்.

“அதான் தோட்டத்தில் இரண்டு பேரும் தனியாகப் பேசிக் கொண்டிருந்தீர்கள் போல் இருக்கிறது!’

நீலா இந்த வார்த்தைதிளைக் கூறும்போது வழக்க்த்தை விட உரக்கப் பேசினாள் ‘கம்பகத்தின் உள்ளமும், உடலும் பலமுறை நடுங்கின.

“அதிகப்பிரசங்கி! வாயை மூடு! பெரியவர்கள் என்று மரியாதை இல்லாமல்) என்னவெல்லாமோ உளறுகிறாய்!” சங்கரன் ஆத்திரத்துன் எழுந்தான்.

நீலாவும் விசுத்துெ ன்று எழுந்தாள். ஆத்திரத்துடன் படுக்கையைக் கட்டிலிலிருந்து எடுத்துத் தரைமீது வீசி எறிந்தாள். துெடர்ந்து விளக்கும் அணைக்கப்பட்டது. புதிதாக மணம/ன தம்பதியின் அறையில் நிலவ வேண்டிய அழகும், ஆனந்தமும் அந்த இருளில் மூழ்கி, மறைந்து போயின

மறு தினம் பகல் கமலாவின் வீட்டிலிருந்து சிறிய கடிதம் ஒன்றை வேலைக்காரி காமுவிடம் கொண்டு வந்து கொடுத்தாள். அதில் அன்று மாலை தேநீர் விருந்துக்கு நீலாவும் சங்கரனும் அவர்கள் வீட்டிற்கு வரப்

‘, எதற்காக ஆசை எழுந்தது என்பதை அவளால் ஊகிக்க முடியவில்லை. கட்டாயம் போக வேண்டும் என்று நீர்மானம் பண் ணிக் கொண்டாள். அங்கே சங்கரனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/113&oldid=682209" இலிருந்து மீள்விக்கப்பட்டது