பக்கம்:பனித்துளி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 117

சங்கரன் சிறிது நேரம் தன்னைப் பற்றியே நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். படித்துப் பட்டம் வாங்கிய வினாக இருந்தாலும் ராமபத்திரய்யருக்கு இருக்கும் கபட மற்ற குணமும், பெருந்தன்மையும் தனக்கு இருக்கின்றனவா என்று சிந்தித்தான். குண விசேஷம் அலாதியாக வாய்ப்பது. கல்லூரிகளிலும், கலாசாலைகளிலும் அதை விலைகொடுத்து வாங்க முடியாது என்று தோன்றியது அவனுக்கு.

“மிஸ்டர் சங்கரன்! உங்களை உங்கள் மனைவி நெடு நெரமாகத் தேடறாளே, இருட்டில் இங்கே என்ன பண்ணு கிறீர்கள்?’ என்று கேட்டுக்கொண்டு கமலா வந்தாள். ‘பார்டி’க்கு வந்தபோது இருந்த உற்சாகம் குறைந்து சங்கரனின் முகம் வாடிப் போயிருந்தது.

“கொஞ்சம் தலைவலியாக இருந்தது! காற்றாட வந்து நின்றிருந்தேன்’ என்று கூறிவிட்டு, புறப்படலாமா நீலா?” என்று மனைவியின் பக்கம் திரும்பிக் கேட்டான். அங்கே அவளுக்குப் பக்கத்தில் காமு நின்றிருந்தாள்.

“துணிகளை மிகவும் அழகாகத் தைக்கிறாள், இந்தப் பெண். ஒ! லாரி! மிஸ் காமு என்று சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு நம் வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறேன். என்னிடம் நிறையத் துணிகள் இருக்கின்றன. தைக்க வேண்டும்’ என்று நீலா, காமுவை அவர்கள் வீட்டிற்கு அழைத்ததைச் சங்கரனிடம் கூறினாள். -

காமுவைச் சங்கரன் அவர்கள் வீட்டிற்கு விரும்பி

அழைக்கவில்லை. ஆனால், நீலா, அழைக்கிறாள், சாதாரண மாக நட்பு முறையில் அல்ல. தையற்காரி’ என்கிற முறை யில் காமு துணி தைத்துக் கொடுத்து நீலாவிடம் கூலி வாங்கப் போகிறாள்!

சங்கரனால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. ‘நான் வருகிறேன் அம்மா’ என்று கமலாவுக்கும், காமு வுக்கும் சேர்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டுக் காரில் மனைவியுடன் போய் ஏறிக் கொண்டான்.

ப.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/119&oldid=682215" இலிருந்து மீள்விக்கப்பட்டது