பக்கம்:பனித்துளி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 119

யோசித்துக் கொண்டிருந்தா ள். தன் உத்தேசத்தைத் அப்பனாரிடம் கூறியபோது, அதெல்லாம் வேண்டாம். அம்மா! நமக்கு அங்கே என்ன ஜோலி இருக்கிறது. வேண்டு மானால் அவர்களே வரட்டும்” என்று அவர் கூறிவிட்டார்.

‘காமு! என்னை நினைவிருக்கிறதா உனக்கு?’ என்று சங்கrன் கேட்ட வார்த்தைகள் திரும்பத் திரும்பக் அணிரென்று அவள் செவிகளில் ஒலித்தன.

சங்கரனை மறந்து விடுவாளா காமு? அப்படி மறக்கிற வளாக இருந்தால் பத்திரிகையில் பிரசுரமான அவன் கல்யாணப் படத்தை எதற்குப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்கிறாள்? அவனையும், அவன் மனைவியையும் நேரில் பார்க்கவேண்டும் என்று கமலாவின் வீட்டிற்கு எதற்காகப் போகிறாள்? சங்கரன் அவள் மனத்தில் நிலையாக இடம் பெற்று விட்டான். அந்த இடத்தை வேறு யாருக்கும் அவளால் அளிக்க முடியாது. மெலிந்து வாடி வரும் தாயின் அபிலாஷையைக் கூடப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற எண்ண்மில்லாமல் காமு டிரெயினிங் படித்து உபாத்தி யாயினி வேலையை ஏற்கப் போவதும் சங்கரனை மறக்க முடியாத காரணத்தால் தான்!

தெருவில் பழம் விற்பவ்ரும், சாமான்கள் விற்பவர் களும் அசந்து உட்கார்ந்து ஒய்வு எடுத்துக்கொள்ளும் பகல் நேரம் வெய்யில் கடுமையாகத்தான் இருந்தது. மண் கூஜாவில் இருந்து தீர்த்தம் எடுத்துச் சாப்பிட்டு விட்டு மறுபடியம் தையல் இயந்திரத்தின் முன்பு வந்து உட்கார்ந் தாள் காமு. அப்போது தெருவில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் வாயிற் கதவைத் திறந்து கொண்டு சங்கரன் உள்ளே வந்தான். காமு ஒரு கணம் திகைத்துப்போனாள். உ டனே சமாளித்துக்கொண்டு அரைத் தூக்கத்தில் இருந்த தகப்பனாரிடம். அப்பா யார் வந்திருக்கிறார் பாருங்கள்” என்று கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/121&oldid=682218" இலிருந்து மீள்விக்கப்பட்டது