பக்கம்:பனித்துளி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரித்துளி 223

கும், .ெ ச ய லு க் கு ம் மதிப்பு வைத்திருக்கிறாள். காமு அவனை மறக்காததைப் பற்றி அவன் மனம் சந்தோஷப் பட்டது. அந்தச் சந்தோஷம் அற்பமானது. தகாதது என்று அவனுக்குத் தெரி ந்துதான் இருந்தது. இருந்தாலும் அவன் அதனால் திருப்தி அடைந்தான். காமு கன்னிகை யாகவே காலங் கழிக்கப் போகிறாளா? ஏன்? யாருக்காக அவள் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்கிறாள்? சங்கரனுக்காகவா? சங்கரனை விட அவள் படித்தவள் அல்ல. அவனை விட விஷயம் தெரிந்தவள் இல்லை. இருந்த போதிலும் காமுவின் மனம் உண்மைக்கும், அன்புக்கும் கட்டுப்பட்டிருக்கிறது.

சங்கரனின் மண்டை கனத்தது. காரின் ஸ்டீயரிங் வீல்’ கைப்பிடியிலிருந்து நழுவி விடுவது போன்ற பிரமை ஏற்பட்டது. அவன் இவ்விதம் எண்ணமிட்டுக் கொண்டு செல்லும் போது, கடற்கரை சமீபத்தில் வந்து கொண் டிருந்தான். மனத்தைச் சுதாரித்துக் கொண்டு மேலும் செல்லலாம் என்று வண்டியைக் கரையோரம் நிறுத்திவிட்டு, மரங்கள் அடர்ந்த இடத்தில் சென்று அமர்ந்தான் சங்கரன். மாலை சுமார் நான்கு மணி இருக்குமாதலால் கடற்கரையில் கூட்டம் அதிகமில்லை.

9. சர்மா வீட்டில் சம்பகம்

வருஷப் பிறப்புப் பண்டிகை நெருங்கி வந்து கொண் டிருந்தது. சொல்லி வைத்தாற் போல் புடவைக்காரன் ஒரு முட்டைப் புடவையோடு சர்மாவின் வீட்டிற்கே வந்திருந் தான். அடுக்கடுக்காகப் பீரோவிலும், பெட்டியிலும் பட்டுப் புடவைகள் மக்கிப் போய்க் கொண்டிருக்கும் போதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/125&oldid=682222" இலிருந்து மீள்விக்கப்பட்டது