பக்கம்:பனித்துளி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 151

வாரம் ஒரு புதுப் புடவை வாங்குவதெல்லாம் அதிசய மில்லை. நீலா ஒரு நாளைக்கு மூன்று முறைகள் உடை மாற்றுவதும் அந்த வீட்டில் அதிசயமில்லை. பழைய புடவையுடன் நிற்கும் சம்பகம் அபூர்வமாகப் புதுப் புடவை உடுத்திக் கொண்டு நிற்பது தான் அவளுக்கு அதிசயமாக இருந்தது!

சம்பகம் சமையலறைப் பக்கம் தன் மாமியாரைத் தேடிப் போனாள். மாமனாருக்கு மட்டும் நமஸ்காரம் செய்து விட்டு இருந்துவிட முடியுமா? சமையலறையில் மீனாட்சி அம்மாள் இல்லை. புதுப் புடவையுடன் வரும் சம்பகத்தைப் பார்த்துச் சமையற்கார மாமி புன்சிரிப்புடன் தலையை ஆட்டினாள்.

“என்னடி! இன்றைக்குத் திடீரென்று உனக்கு மனசில் மாறுதல் ஏற்பட்டு விட்டது? நேற்று எ ன் னா ல் ஆனவரைக்கும் உன்னைப் புதுப் புடவையைக் கட்டிக் கொள்ளச் சொன்னேன். மாட்டேன் என்று விட்டாயே?’’ என்று அதிசயித்தாள் அந்த அம்மாள்.

“இன்றைக்கு மட்டும் என்ன மாமி? என் மாமனார்தான் நான் இப்படி இருப்பதற்கு வருத்தப்பட்டுக் கொள்கிறார். பெரியவர் சொல்லும்போது கேட்காமல் இருக்கலாமா என்றுதான் புதுப் புடவையைக் கட்டிக் கொண்டேன்.”

‘உன்னுடைய பொறுமைக்கும். நிதானத்துக்கும் பகவான் உன்னைக் கைவிட மாட்டார், சம்பகம்! பாரேன், விக்கிரத்திலேயே உன் ஆத்துக்காரர் உன்னைத் தேடிக் கொண்டு ஓடோடியும் வரப் போகிறார். சம்பகா! நான் தெரியாமல் அந்த மாதிரி யெல்லாம் செய்து விட்டேன்’ என்று உன்னிடம் சொல்லப் போகிறார். பார்த்துக் கொண்டே இரு’ என்று அந்தரங்கமான அன்புடன் அந்த அம்மாள் பேசிக் கொண்டே போனாள்.

சம்பகம் ஒரு கணம் யேர்சனையில் ஆழ்ந்தாள். ான்றைக்காவது ஒரு நாள் அவள் கணவன் வந்து அவளை அரவணைத்து ஆதரவுடன் இல்லறம் நடத்துவான் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/153&oldid=682253" இலிருந்து மீள்விக்கப்பட்டது