பக்கம்:பனித்துளி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பணித்துளி i3

“படித்த பெண்ணாக இருந்தும் நீ கூட இப்படி அசட்டை யாக இருந்து விட்டாயே கா மு?’ என்று காலையில் வந்த போது கடிந்து கொண்டார், டாக்டர். தகப்பனாரும், பெண்ணும் தீவிரமாக யோசித்தார்கள். திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டவர் போல் ராமபத்திர அய்யர், =

‘ஏனம்மா? சங்கரனைப் போய்ப் பார்த்து வருகிறேனே. அவன் மாமன்ார் கூடப் பெரிய டாக்டராமே?:அவன் சிபார்க செய்தால் தற்சமயம் பணமில்லாமல் வைத்தியம் பார்க்க மாட்டாரோ?’ என்று கேட்டார் காமுவைப் பார்த்து.

காமு அவசரத்துடன், ‘உங்களுக்குத் தெரியாதா அப்பா? அவர் மனைவி நீலாவுக்கு உடம்பு சரியில்லையாம். நினைவில்லாமல் தகப்பனாரின் நர்ஸிங்ஹோமி'ல் கிடக் கிறாளாம் அந்தப் பெண். நேற்று கமலா சொன்னாள். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் வேறு தொந்தரவு செய்தால் நன்றாக இருக்குமா?’ என்றாள். பிறகு தன் தோழி கமலாவைப் போய் ஏதாவது பணஉதவி கேட்கலாமா என்று நினைத்துக் கொண்டாள். அவ்விதமே செய்யலாம் என்கிற தீர்மானத்துடன் அம்மாவுக்கு ஆகாரம் கொடுத்து விட்டுக் கிளம்பினாள் காமு.

12. விசாலாட்சியின் மறைவு

காமு வாயிற்படி தாண்டுதற்கு முன்பு விசாலாட்சி இரண்டு தடவை பலமாக இருமினாள். அப்புறம் சிறிது சுதாரித்துக் கொண்டு, “காமு!’ என்று கூப்பிட்டாள். காமு வந்து அவள் அருகில் உட்கார்ந்ததும் அவள் தலையை அன்புடன் வருடிக்கொண்டே, சாயங்கால வேளையில் என்னைத் தனியாக விட்டுவிட்டு எங்கே போகிறாய் காமு’ என்று கேட்டாள் விசாலாட்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/165&oldid=682266" இலிருந்து மீள்விக்கப்பட்டது