பக்கம்:பனித்துளி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பனித்துளி

இந்த ரவிக்கை நன்றாக இருக்காது. நீ பட்டுப்பட்டாக உடுத்தும் போது நான் பார்க்கப் போகிறேனா?” என்று விசாலாட்சி நேற்றுத்தான் கூறியது போல் இருந்தது. அந்த வார்த்தை எவ்வளவு சீக்கிரம் பலித்து விட்டது?

பகலில் அலைந்த அலைச்சலினால் ராமபத்திரய்யர் ஒரு பக்கம் முடங்கிப் படுத்துத் தூங்கி விட்டார். தகப்பனாருக்கு அருகில் காமு தன்னுடைய படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டாள். வெகு நேரம் அவளுக்குத் துக்கம் வரவில்லை. நேற்று இந்த நேரத்தில் பளிச் பளிச்சென்று பேசிக் கொண் டிருந்தவள் இன்று பிடிசாம்பலாகப் போய் விட்டாள். காமு காமு என்று ஆசையுடன் அழைத்தவளின் மூச்சு இன்று காற்றோடு கலந்து விட்டது. ‘சீ’ என்ன வாழ்வு இது?’ என்று காமு மனத்துக்குள் எண்ணி வேதனை அடைந்தாள். .

கூடத்து மூலையில் அவள் தாயின் உயிர் பிரிந்த இடத் தில் குத்து விளக்கு ஒன்று ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. ஆடாமல், அசங்காமல் சுடர் விட்டு அது அந்த இடம் பூராவும் ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தது.

விளக்கின் சுடரையே உற்றுப் பார்த்தாள் காமு. அவளுக்குப் புத்தி தெரிந்த நாட்களாக வெள்ளிக்கிழமை தோறும் விசாலாட்சி அதைப் பள்பளவென்று துலக்கி, குங்குமப் பொட்டிட்டு கொல்லையில் புஷ்பிக்கும் பாரிஜாத மலர்களை மாலை கோத்து அதற்குப்போட்டு நெய் ஊற்றித் திரியிட்டு விளக்கேற்றி பூஜிப்பாள். அழகிய பெண் ஒருத்தி மாலை அணிந்து உட்கார்ந்திருப்பது போ ன்ற பிரமைக்ய அந்த விளக்கு ஏற்படுத்தி வந்தது அந்தி விளக்கே, அலங்காரப் பெண்மணியே என்று மெல்லிய குரலில் ஸ்தோத்திரம் பாடி, தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தி நமஸ்கரிப்பாள் விசாலாட்சி. நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் இரவும், பகலும் அணையாமல் கொலுப் படிகளின் அருகில் எரிந்து கொண்டிருக்கும் அந்த விளக்கு. தீபாவளிப் பண்டிகையின் பேது காமுவுக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பு மணை போட்டு, கோலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/170&oldid=682272" இலிருந்து மீள்விக்கப்பட்டது