பக்கம்:பனித்துளி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பனித்துளி

“ஏதேது பெரிய கேள்வி யெல்லாம் கேட்கிறாய் இப்போது? தாய் இறந்து போனதும் ஸ்மசான வைராக்கியம்’ என்று கூறுவார்களே அது ஏற்பட்டுவிட்டதா உனக்கு? நாளைக்குக் கல்யாணமானால் அம்மாவை எங்கே நீ நினைக்கப் போகிறாய்?’-ஒளிப் பெண் இவ்விதம் சொல்லி விட்டு மெல்லச் சிரித்தாள்.

‘கல்யாணமா? அம்மா இருந்தபோது செய்து கொண் டிருந்தால் அவள் மனசுக்காவது ஆறுதலாக இருந்திருக்கும். இப்படி ஏங்கிச் செத்திருக்க மாட்டாள். இனிமேல் யாருக்காக் நான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்?” காமுவின் மனம் பதட்டத்தோடு கேட்டது இப்படி.

‘உனக்காகவே நீ கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டியதுதான். இப்படி இருந்த எத்தனை பேர்களை நான் பார்த்திருக்கிறேன்.”.

‘தர்க்கம் பண்ணுவதற்கு வந்திருக்கிறாயா என்ன்?” “உண்மையைத் தான் சொல்லுகிறேன். பாரேன் நீ வேண்டுமானால்” என்று கூறிவிட்டுத் தண்டை ஒலிக்க எழுந்தாள் ஒளிப் பெண்.

போகாதே அம்மா. நீ வந்து பேசிக் கொண்டிருந்தது எனக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. போகாதே!’ ராமபத்திர அய்யர் துாக்கம் கலைந்து விழித்துக் கொண்டார். காமு தூக்கத்தில் பிதற்றுவதைப் பார்த்து அன்புடன், காமு, பயந்து விட்டாயா அம்மா? விழித்துக் கொள். பொழுது விடிந்து விட்டதே! உனக்கு இந்த வீட்டில் இருப்பதற்குப்பயமாக இருந்தால் சர்மாவின் வீட்டில் போய் இருக்கிறாயா அம்மா?’ என்று கேட்டார் அவர்.

இங்கே காமு தாயை நினைத்து வருந்திக் கொண் டிருக்கும்போது நீலாவின் வீட்டில் வளைகாப்புக் கல்யாணம் அமர்க்களப்பட்டது. நீலாவுக்கு உடம்பு கொஞ்சம் தேறி பிறந்த வீட்டில் இருந்தாள். நல்ல நாள் பார்த்து வளைகாப்புக்கு முசுர்த்தம் வைத்திருந்தார்கள் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/172&oldid=682274" இலிருந்து மீள்விக்கப்பட்டது