பக்கம்:பனித்துளி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180. பனித்துளி

‘ குழந்தையைப் பற்றி எனக்கும் பாத்யதை உண்டு. அதனால் மனைவி என்னுடன் குழந்தையோடு வந்து வாழ்க்கை நடத்த வேண்டும்’ என்று கோர்ட்டில் கேஸ் போடுவான். அவள் படித்தவளாயிற்றே, அதற்கு சும்மா இருப்பாளா? பணம் தான் இறக்கை முளைத்துக்கிடக்கிறது. செலவு வேண்டுமே அதற்கு? அனாவசியமாக மனைவியை அடித்துத் துன்புறுத்துகிறார் என்று அவள் கோர்ட்டில் வாதிப்பாள். நீதிபதி எவ்விதம் தீர்ப்புக் கூறுகிறாரோ அப்படி நடந்து கொள்வார்கள். ஆனால், அப்புறம் மாத்திரம் ஒற்றுமையாக இருந்து விடுவார்களா என்ன? நீதி ஸ்தலமும், நீதிபதிகளும் மனிதர்களை ஒரு கட்டுப் பாட்டுக்குள் அடங்கி இருப்பதற்கு ஏற்படுத்தப்பட்டிருக் கிறார்களே தவிர, மனிதர்களின் மனத்தைத் திருத்தி விடுவார்கள் என்று சொல்ல முடியுமா, காமு? கணவன், குடும்பம் என்று அன்புடன் இல்லறத்தை நடத்த மனைவிக்கு ஆசையும், பக்தியும் வேண்டும். மனைவி என்று காதல் செலுத்தக் கணவனுக்கு உயர்ந்த மனம் வேண்டும். இர்ண்டும் பொருந்தியிருந்தால் மூன்றாவது மனிதர்களுக்கு அங்கு என்ன வேலை இருக்கிறது சொல், பார்க்கலாம்!”

‘நானும், உன் அம்மாவும் எத்தனையோ தடவைகள் சண்டை பிடித் திருக்கிறோம். உன் அம்மா என் பேரில் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்திருக்கிறாள். நான் அவள பேரில் கோபித்துக் கொண்டு சாதத்தை வீசி எறிந்து விட்டுப் பட்டினியாக வயலுக்குப் போய் இருக்கிறேன். அவள் கோபம் தணிந்து தயிர் சாதத்தைப் பிசைந்து எடுத்துக் கொண்டு வெயிலையும் லட்சியம் பண்ணாமல் என்னைத் தேடிக் கொண்டு வருவாளே! இன்னொருத்தருக்கு எங்கள் சண்டையைப் பற்றித் தெரியுமா?’’

ராமபத்திர அய்யர் தம் பால்ய வாழ்க்கையையும்,

விசாலாட்சியையும் நினைத்து வருந்தினார். வயதாகி ஒளி குறைந்த அவர் கண்களிலிருந்து நீர் வடிந்தது. பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/182&oldid=682285" இலிருந்து மீள்விக்கப்பட்டது