பக்கம்:பனித்துளி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 183

போதெல்லாம் குழந்தைப் பருவம் எவ்வளவு நிஷ்களங்க மானது என்று நினைத்து சந்தோஷிப்பான் சங்கரன். ‘அவனுக்கும் குழந்தை பிறக்கப் போகிறது. அப்பா என்று ஆசையுடன் அது அழைக்கும். உரிமையுடன் அவனிடம் முரண்டு பிடிக்கும். வீடு முழுவதும் தவழ்ந்து விளையாடும். தத்தித்தத்தி நடக்கும், அதற்கு நடை பழக்கிக் கொடுக்கும் போது அவனும் குழந்தையைப் போல் நடக்கலாம். நீலா என்ன குற்றம் செய்திருந்தாலும் குழந்தைக்காக அவளை மன்னித்து விடலாம் என்று கூட அவன் நினைத்தான். துன்பத்தை, கவலையை மறக்க இளங்குழந்தை வீட்டில் ஆடி ஒடிவிளையாடப் போகிறது என்றெல்லாம் சங்கரன் பானு விடம் பேசும்போதும் விளையாடும் போதும் எண்ணிக்

கொண்டான். -

‘குழந்தை பிறந்து விட்டது என்று தெரிந்தால் எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஒடுவான். ஏன், நான் கூடத்தான் போய்ப் பார்ப்பேன், குழந்தை நம்முடையது தானே? அதன் மேல் எனக்கு என்ன கோபம் இருக்கப் போகிறது?’ என்று மீனாட்சி அம்மாளும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“நாட்டுப் பெண்ணைக் கண்டால் ஆகிறதில்லை சில பெருக்கு பேரன் பேத்திகளை மாத்திரம் எடுத்துக் கொஞ்சு வார்கள். நல்ல அதிசயம் இது?’ என்று சமையற்கார மாமி சம்பகத்திடம் கூறிச் சிரித்தாள்.

எல்லோரும் நீலாவுக்குக் குழந்தை பிறந்தால் குடும்ப நிலை சீர் திருந்தி விடும் என்று எதிர்பார்த்தார்கள். rrமயத்திர அய்யரும் அப்படித்தான் நினைத்தார். அவர் அமாவைப் பார்க்கும் போதெல்லாம், “எத்தனை கோபம் இருந்தாலும் புதிதாகப் பிறந்த குழந்தையை உதாசீனம் செய்யக் கூடாது அப்பா. மீனாட்சியையாவது அவர்கள் விட்டுக்கு அனுப்பிவை. பிறகு எல்லாம் தன்ன்ால் சரியாகி விடும்’ என்று சொல்லி வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/185&oldid=682288" இலிருந்து மீள்விக்கப்பட்டது