பக்கம்:பனித்துளி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பணி த்துளி

வெளியில் போகக் கூட தயக்கமாக இருக்கிறது. ஆனால் நம் சம்பந்திகள் மட்டும் காரில் ஊரை ஒரு நாளைக்கு மூன்று சுற்றுகள் சுற்றுகிறார்கள். ‘புருஷனுடன் ஒத்துக் கொள்ளவில்லை. படிக்கிறாள். இதில் என்ன தவறு?” என்று அந்த டா க் - ர் வேறு நாலு பேரிடம் சொல்லு கிறாராம். ஐயோ பெருமையே!” என்றாள் மீனாட்சி.

“இப்பொழுது நீ என்னைப் படிக்க விடாமல் தொண தொணவென்று பேச வந்து விட்டாயே? இந்தத் தொந்தரவு அளவுக்கு மீறிப் போனால், நானும் உன்னை விலக்கித்தான் வைக்க வேண்டும்! விஷயம் என்னவென்று சொல்!” என்று அலுத்துக் கொண்டே கேட்டார் சர்மா.

“எதற்கும் நீங்கள் சம்பந்திக்கு ஒரு கடிதம் எழுதிக் கேட்டு விடுங்கள். பிறகு என்ன செய்வது என்று யோசிக்க லாம்” என்று கூறினாள் மீனாட்சி அம்மாள்.

சர்மாவுக்கு மனைவி கூறுவதில் நியாயம் இருப்பதாகத் தோன்றவே, அன்றே டாக்டர் மகாதேவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். சங்கர ன் கூறியவைகளை எழுதி, நாட்டுப் பெண்ணின் படிப்புக்குத் தாம் ஒன்றும் ஆட்சேபணை செய்யவில்லை என்றும் எழுதினார், பரஸ்பரம் இரு குடும்பங்களின் நலனையும் இது பாதிக்கிறது என்றும் தெரிவித்தார். -

ஆனால், சம்பந்தியிடமிருந்து அதற்கு ஒன்றும் பதில் வரவில்லை.

சங்கரனுக்கோ, நீங்கள் வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷ வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன்’ என்று நீலா கூறிய சொற்கள் மணி அடிப்பது போல் அடிக்கடி செவிகளில் ஒலித்தன. தான் வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டால் என்ன? அதுவும் காமுவையே கல்யாணம் பண்ணிக் கொண்டால் என்ன?” என்று நினைத்தான் சங்கரன்.

இவ்வாறு நினைக்கும்போதெல்லாம் அவன் மனம் என்று மில்லாத சந்தோஷத்தால் நிரம்பியது. ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/206&oldid=682311" இலிருந்து மீள்விக்கப்பட்டது