பக்கம்:பனித்துளி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பனித்துளி

பூட்டி இருந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தாள் விசாலாட்சி. “அரைப் பவுன் மா ைல யு ம், தங்க ஒட்டியானமும் கண்ணைப் பறிக்கிறது. பாழும் பெண் இருந்து அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை’ என்று அங்கலாய்த்துக் கொண்டாள். கெட்டிக் கரைப் புடவைகள் பீரோ நிறைய அடுக்கி வைத்திருக்கும் பிரதாபங்களை ஓயாமல் அளந்து கொண்டிருந்தாள். ராமபத்திரய்யருக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

“ஏண்டி, நீ துக்கம் விசாரிக்கப் போனாயா அல்லது வீட்டைச் சோதனை போடப் போனாயா? உன்னுடைய உளறல் பத்து நாட்களாக என்னால் சகிக்க முடிய வில்லையே!” என்று அவர் அதட்டிய பிறகுதான் விசாலாட்சி ஒய்ந்தாள்.

நாற்பத்தி மூன்று வயதானாலும் முத்தையாவுக்கு இன்னொரு விவாகம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. முதல் தாரத்துக்குப் பெண் இருந்தாள். அவளுக்குக் கல்யாணம் நடந்தால் அதை விமரிசையாக நடத்துவதற்கு என்னதான் பணம் இருந்தாலும் விட்டில் ஒரு பெண் இருக்கிற மாதிரி ஆகாது என்று நினைத்து முதலில் மூன்றாந் தாரமாகத் தான் கால்யாணம் பண்ணிக் கொண்டு பிறகு மகளின் கல்யாணத்தை நடத்தத் தீர்மானித்தான்.

“பாருவுக்குக் கல்யாணம் ஆகவேண்டும். அதற்காகத் தான் இந்தக் கல்யாணம் பண்ணிக் கொள்ள நினைத்திருக் கிறேன். காமுவைப் பற்றி எனக்குத் தெரியும். பதவிசும், அடக்கமும், பொறுமையுமே உருவானவள் அவள். இவ்வளவு பெரிய பாரத்தை அவளால் வகிக்க முடியும் என்கிற தீர்மானத்தால்தான் நான் தங்களைத் துணிவுடன் கேட்கிறேன்” என்று அவனிடமிருந்து வந்த கடிதத்தை ராமப்த்திரய்யர் கண் கலங்க வாசித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/32&oldid=682336" இலிருந்து மீள்விக்கப்பட்டது