பக்கம்:பனித்துளி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 43

ராமபத்திர அய்யரின் மனம் மட்டும் ஒரே பிடிவாதமாக இருந்தது. ஏழையானாலும் இளைஞனாகவும் மனைவி யிடம் அன்புடையவனாகவும் பார்த்துத் தான் காமுவை ஒப்புவிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண் டிருந்தார்.

அன்று சங்கரன் ராஜம்பேட்டையிலிருந்து வந்திருந் தான். ஏழ்மையின் துன்பத்தை வெளிக்குக் காட்டாமல் சதா சிரித்த முகத்துடன் பேசும் ராமபத்திர அய்யர் அன்று என்னவோபோல் இருந்தார். கலகலப்பாகப் பேசாமல் முகத்தில் துயரம் தேங்கஅவர் இருந்த நிலைமை சங்கரனைச் சஞ்சலத்தில் ஆழ்த் தியது. சங்கரன் ராஜம்பேட்டையி லிருந்து வந்துவிட்டால் காமு நொடிக்கொரு தடவை ஏதாவது காரணத்தை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும். போவதும் வருவதுமாக இருப்பாள். அன்று சாப்பாட்டிற்கு அப்புறம் காமு சமையலறையிலேயே ஐக்யமாகி விட்டாள்.

ராமபத்திரய்யர் ஊஞ்சலில் சாய்ந்து கொண்டு யோசனையில், ஆழ்ந்திருந்தார். சங்கரன் ஏதோ ஒரு புஸ்தகம் படிப்பதில் ஈடுபட்டிருந்தான். ஊஞ்சல் சிறிதே ஆடுவதால் ஞொய் ஞொய் என்கிற சத்தத்தைத் தவிர வேறு ஒரு சத்தமும் இல்லாமல் நிசப்தமாக இருந்தது அந்த விடு. முற்றத்தில் துளசி மாடத்துக்குக் காலையில் பூஜை செய்தபோது அணிவித் திருந்த நித்திய மல்லிகை மாலையி லிருந்து கம் மென்று வாசனை வீசிக் கொண்டிருந்தது. துளசி மாடத்தைச் சுற்றி அழகாகக் கோலம் இட்டு செம்மண் பூசி இருந்தாள் காமு. அவள் போட்டிருந்த கோலத்தின் மூலமே அவள் தைத் திறனை ஒருவாறு உணர்ந்து கொண்டான் சங்கரன். நொடிக்கொரு தரம் அவன் சமையலறைப் பக்கம் பார்த்து அங்கே காமு இல்லாமல் இருப்பதைக் கண்டு சோர்ந்து போனான்.

என்ன மாமா இன்றைக்கு ஒரு மாதிரியாக இருக்கிறீர்களே? உடம்பு சரியில்லையா என்ன?’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/45&oldid=682350" இலிருந்து மீள்விக்கப்பட்டது