பக்கம்:பனித்துளி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பனித்துளி

அப்பா இல்லைபோல் இருக்கிறது?’ என்று காமுவைப் பார்த்துக் கேட்டவன், உரிமையோடு அங்கு இருந்த பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டான்.

காமுவின் உடல் ஒரு முறை நடுங்கியது. சட்டென்று எழுந்து ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு நின்றாள். யாருடைய வரவை எதிர்பார்த்து ஏங்கி யிருந்தாளோ, அவனே நேரில் வந்து பேசுகிறான். வெட்கத்தால் முகம் குப்பென்று சிவக்க, தலையைக் குனிந்து கொண்டாள் காமு. ஆ.மா...ம் பாழும் வார்த்தைகள் தொண்டை யிலேயே சிக்கிக் கொண்டன.

நாளைக்கு ஊருக்குப் போகிறேன். இங்கே வந்து இரண்டு நாட்கள் கூட தங்கவில்லை என்று உன் அப்பா கோபித்துக் கொள்ளப் போகிறாரே என்று வந்து விட்டேன்’ என்றான் சங்கரன். அவன் மட்டும் நெடு நாள் பழகியவன் போல் அவளுடன் பேசினான்.

“இதோ வந்து விட்டேன். அப்பா இன்னும் அரை மணியில் வந்து விடுவார்’-சமையலறைப் பக்கம் போவ தற்குத் திரும்பினாள் காமு.

‘காபி போடுவதற்கு அவசரம் ஒன்றும் இல்லை. உன்னை ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்றே ஒடி வந்திருக்கிறேன்.”

சங்கரன் ஆவலுடன் காமுவைப் பார்த்தான். தந்தப் பதுமை போல் நிற்கும் அவளுக்குத் தன் கண்ணே பட்டு விடப் போகிறது என்று அஞ்சினான்.

அன்றைக்கு அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்த தைக் கேட்டாயோ? உன் சம்மதம் தெரிந்தால் ஊருக்குப் போய் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து விடுவேன்’ என்றான் சங்கரன்.

காமு பூமியைப் பார்த்துக் கொண்டு நின்றாள். *சம்மதம் வேண்டுமாம் இவருக்கு!” காமுவின் மனம் பல தடவைகள் இவ்வார்த்தைகளைச் சொல்லியது. கரும்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/54&oldid=682360" இலிருந்து மீள்விக்கப்பட்டது