பக்கம்:பனித்துளி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பனித் துளி

பரிதாபமான அந்த ‘முகத்தைப் பார்த்ததும் சங்கரனுக்குக் காமுவின் வருங்கால வாழ்வு இந்த வீட்டில் இன்னும் பரிதாபமாக ஆகிவிடக் கூடும் என்று தோன்றியது. ‘மன்னி, எனக் ஏனோ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணமே இல்லை?” என்று கூறினான் சங்கரன்.

பெண் நன்றாக இருக்கிறாளாமே? எல்லோரும் பார்த்து விட்டு வந்தார்கள். நீங்களும் பார்த்திருக்கிறீர் களாம்.’’

‘பெண் பார்ப்பதற்கு நீங்கள் போக வில்லையா மன்னி?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டான் சங்கரன்.

‘இல்லை. நான் எதற்கு? அவள் கூறிய பதிவில் அந்தக் குடும்பத்தின் மனோபாவம் பளிங்கு போல் தெரிந்தது.

  • சம்பகம் எதற்கு? வாழாவெட்டி! கணவனால் கை விடப்பட்டவள் எதற்கு?’-இவ்வாறு எண்ணியபோது, சங்கரனுக்கு மூளையே குழம்பி விடும் போல் ஆகிவிட்டது.

“மன்னி! பானு எங்கே?’ என்று ே கட்டான். “ஜுரம் நெருப்புப் பறக்கிறது. நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு, சம்பகம் அங்கிருந்து போய்விட்டாள்.

ஆடுப்பங்கரையில் தன்னுடைய மேற்பார்வையில் தயாரான ரவாலொஜ்ஜியையும், வெள்ளி டம்ளரில் காபியையும் எடுத்துப் போய் மீனாட்சி அம்மாள் டாக்டர் மகாதேவனுக்கு உபசாரம் பண்ணினாள்.

ர்ே விஷயங்கள் எல்லாம் நீங்கள் ஒன்றுமே சொல்ல வேண்டியதில்லை. எனக்கு இருப்பதெல்லாம் நீலாவுக்குத் தான். அவளைத் தவிர வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறேன். நான்?’ என்று பெருமையுடன் கூறி முடித்தார் மகாதேவன்.

“சங்கரனை ஒரு நிமிஷம் பார்த்துவிட்டுப் போய் விட்டால் தேவலை’ என்று மகாதேவன் அவசரப்படுத்தவே, மறுபடியும் மீனாட்சி அம்மாள் அவனைத் தேடிக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/62&oldid=682369" இலிருந்து மீள்விக்கப்பட்டது