பக்கம்:பனித்துளி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 63

இடத்துக்கு ஒட்டி விட்டது. சித்தப்பன் கல்யாணத்துக்கும். தடங்கலாக இருக்கிறது. இப்போ’ என்று மீனாட்சி அம்மாள் பட படவென்று ஆத்திரத்துடன் பொரிந்து தள்ளினாள். ‘வருகிற வியாதியாவது சாதாரணமாக வருகிறதா? நூறு நூறாய்ச் செலவழிக்கும்படியல்லவா இருக்கிறது?’ என்று ருக்மிணி அலுத்துக் கொண்டாள். அவளைவிட சம்பகத் துக்கும், பானுவுக்கும் அந்த வீட்டில் உரிமை அதிகம் உண்டு என்பதை அவள் மறந்தே விட்டாள்.

உணர்ச்சி ம்ேவிட்டால் சர்மா பேசும் சக்தியை இழந்து, தம் அறையில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார். பிள்ளையால் அனாதையாக வி ட ப் ப ட் ட குழந்தையைத் தான் கூட மனைவிக்குப் பயந்து அதிகமாகக் கவனிக்காமல் இருந்து விட்டோமே என்று அவர் மனச்சாட்சி அவரைக் குத்திக்கொண்டேயிருந்தது.

சம்பகம் துக்கம் ஒரு எல்லையை மீறிப் போகும்போது ஏற்படும் ஒரு வித தைரியத்தை அடைந்திருந்தாள். குழந்தைக்கு டாக்டர் கூறியபடி ஆகாரம் கொடுத்தும், கண் இமைக்காமல் அவள் அருகில் உட்கார்ந்தும் சிகிச்சை செய்தாள். கொடிய தொத்து வியாதி ஆதலால், அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பானு இருந்த அறைப் பக்கம் யாருமே வருவதில்லை.

‘ குழந்தையிலே நானும், அவனும் ஒன்றாக விளையாடு வோம். எடுத்ததற்கெல்லாம் அவன் என்னுடன் சண்டை பிடிப்பான்’ என்று நாலு பேர் முன்னிலையில் பானுவின் தகப்பானரைப் பற்றி ருக்மிணி பெருமையாகப் பேசுவாள். அவள் அன்று உடன் பிறந்தானின் குழந்தை சாகக் கிடக் கிறதே என்றும் பார்க்கவில்லை. பானு இருக்கும் அறைப் பக்கம் பார்த்தால் கூட வியாதி ஒட்டிக் கொள்ளும் என்கிற நோக்கத்துடன் நடந்து கொண்டாள் அவள்.

இவ்வளவு அலட்சியங்களையும், வேதனைகளையும் சம்பகம் எதற்காகச் சகித்துக் கொள்ள வேண்டும்? என்றாவது ஒரு நாள் தன் துன்ப வாழ்வுக்கு விடிவுகாலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/65&oldid=682372" இலிருந்து மீள்விக்கப்பட்டது