பக்கம்:பனித்துளி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 __ பனித்துளி

r

என்ன சுரணை இல்லையா? பெண்டாட்டி வா என்று காரை அனுப்புகிறது, இவன் பற்ந்து கொண்டு ஒடுகிறது?’ என்று பெரிதாகக் கத்தினாள் மீனாட்சி அம்மாள்.

‘பத்துவருஷம் குடும்பத்தின் கஷ்டசுகங்களைப் பகிர்ந்து சகித்து வாழ்ந்து வந்த சம்பகத்துடனும் சண்டை, நேற்று கல்யாணம் ஆகி, இன்றோ நாளையோ புக்ககம் வரவிருக்கும் புது நாட்டுப் பெண்ணிடமும் சண்டை” என்று சமையல் அறையில் வேலையாக இருக்கும் சமையற்கார மாமி நினைத்துக் கொண்டாள்.

தன் கட்சியை யாரும் ஆமோதிக்கவில்லை என்பது தெரிந் ததும் மீனாட்சி அம்மாள் சமையலறைப் பக்கம் வந்தாள். சம்பகம் இருந்தபோது இருந்த சமையலறையாக இல்லை அது. சாமான்கள் வைத்திருக்கும் டப்பாக்களின் மேல் துரசி படிந்து மங்கிப் போய் இருந்தது. கண்ணாடி ஜாடிகளில் ஊறுகாய் சுண்டி உலர்ந்துகிடந்தது. குழாய் அடியில் சற்றே தவறினால் வழுக்கி விழுந்து டுெம்படி பாசி படிந்து கிடந்தது. இரண்டு வேளை ச. மைத்து, இடைவேளை சிற்றுண்டி காபி போட்டு விட்டு, சலையற்கார மாமி கதை, புராணம் கேட்க எங்காவது போய் விடுவாள். சமையலறை யைத் துப்புரவாக ஒழித்து வைக்க வேண்டும் என்று அவளுக்கு என்ன அக்கறை?

வீட்டில் இருக்கும் மற்றப் பெண்கள் புடவைகளைப் பற்றியும் நகைகளைப் பற்றியுமே பேசிப் பொழுதைக் கழித் தார்கள். சாமான் அறையில் மூலைக்கு மூலை தேங்காய்

o - H 7. Fo - : # *- H

உரித்த நாரும்,குப்பையும் இறைந்து கிடந்தன. மாதத்துக்கு இரண்டு தடவைகள் அந்த அறையைச் சுத்தம் செய்வது சம்பகத்தின் வேலையாக இருந்தது. கு டு ம் ப த் ைத ப் பாதுகாப்பவர்கள் பெண்கள். வீ ட் ைட கவர்க்கமாக மாற்றுவதோ நரகமாக்குவதோ அவர்கள் வேலை. -

காமரா அறையில் மூலைக்கு மூலை கொடியில் புடவை களும், ரவிக்கைகளும் தொங்கிக்கொண்டிருந்தன. வெளியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/76&oldid=682384" இலிருந்து மீள்விக்கப்பட்டது