பக்கம்:பனித்துளி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பளித்துளி 77

பெண்ணால் இரண்டு இடங்களும் விளங்குவதாகப் பெரியவர்கள் கூறுகிறார்கள். உலகத்தை இயக்கும் மகா சக்தியைப் பெண் வடிவில் போற்றுகிறோம். பூமியைப் பெண்ணாக மதிக்கிறோம். பிறந்த நாட்டைத் தாய் நாடு என்று கெளரவிக்கிறோம். அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று அன்னையை முதலில் தொழுகிறோம். இன்றும் நம் சமூகத்தில் பெண்ணின் வாழ்வு அவலமாகத் தான் இருக்கிறது. தினசரியைப் பிரித்தால் தினம் மனைவி மக்களை ஏதோ ஒரு காரணம் கொண்டு கொலை செய்து, பிறகு தாங்களும் மடியும் ஆண்களைப் பற்றி வாசிக்கிறோம். பெண்களைத் தாய்மார்களாகவும், சகோதரிகளாகவும் பாவிக்கும் குணம் அநேகரிடம் இல்லை. கணவன் வீட்டில் சுகதுக்கங்களை அனுபவிக்க வரும் மருமகள் பல குடும்பங் களில் கேவலமாக நடத்தப்படுகிறாள். சில குடும்பங்களில் மாமியின் நிலையும் இவ்வாறாக இருக்கின்றது. ஒருவரோடு ஒருவர் சரிக்கட்டிப் போகும் சுபாவம் இல்லாமையே இதற்குக் காரணம்.

சம்பகம் மனச் சாந்திக்காக வந்து தங்கினாள். மண வாழ்க்கையில் பல வருஷங்கள் மாமியாரின் ஏச்சுப் பேச்சுக் களைக் கேட்டுப் புண்பட்டுப் போன மனத்துக்கு ஆறுதலைத் தேடி அங்கே வந்தாள். அங்கே அவள் மதனி-அவளைப் போன்ற ஒரு பெண்-அவளுக்கு கெளரவம் தர மறுத்தாள். வாழா வெட்டி என்கிற அலட்சிய மனப்பான்மையுடன் அவளை ஏசினாள். குழந்தை பானுவுக்குக் கூட அங்கே சுதந்தரம் இல்லாமல் போய்விட்டது.

ஒரு நாள் மாமா குழந்தையின் மோட்டாரை அவள்தான் உடைத்ததாக மாமி கூறினாள். விளையாட்டுச் சாமான் களைத் தொடக்கூடாது என்று குழந்தைக்குத் தெரியுமா என்ன? குழந்தை மனத்துக்கு பேதம் தெரியக் காரணம் இல்லையே! சம்பகத்தின் தமையனும் தங்கையிடம் ஒரு மாதிரியாகப் பேச ஆரம்பித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/79&oldid=682387" இலிருந்து மீள்விக்கப்பட்டது