பக்கம்:பனித்துளி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

---

82 பனித்துளி

பிரமை சதா அவளுக்கு ஏற்பட்டு வந்தது. இந்த ஆசை அநியாயமானது என்பதை உணர்ந்தே காமுவின் மனம் ஆசைப் புயலில் சிக்குண்டு தவித்தது.

கிராமத்தில் வேத அத்யயனம் செய்யும் பிராம்மணப் பிள்ளை ஒருவன் அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முன் வந்தான். தன் புத்தி நிதானத்துக்கு வந்தபோது ராமபத்திர அய்யர் காமுவைக் கூப்பிட்டுக் கேட்டார். மெளனமாகக் கண்ணிர் வழிய நிற்கும் காமுவைப் பார்த்ததும் அவள் மனநிலை அவருக்கு விளங்கியது. தானே அவளிடம் ஆசைப் பயிரை நட்டுத் தண்ணிர் ஊற்றி வளர்த்து, அதை வேருடன் பிடுங்கி எறிய முற்பட்டது எவ்வளவு மகத்தான பாவம் என்பதை விவேக்சாலியான அவர் மனது அறிந்து கொண்டது. “காமு! காமு!’ என்று மனம் உருகிக் கண்ணிர் விட்டார்.

இதுவரையில் பேசா திருந்த கா முவும் தகப்பனார் அருகில் வாஞ்சையுடன் உட்கார்ந்து, ‘அப்பா! என்னைவிட வயசான எவ்வளவோ பெண்கள் கல்யாணமில்லாமல் இருக்கிறார்கள். படித்துவிட்டுஉத்தியோகம்செய்கிறார்கள். போன வாரம் கூட கிராம ஆஸ்பத்திரிக்கு டாக்டர் ஒருவர் வந்திருந்தார். அந்த அம்மாளுக்கு இருபத்தைந்து வயசு இருக்கும். கல்யாணம் ஆகவில்லையாம். நானும் ஏதாவது படித்து வேலை பார்க்கிறேனே அப்பா? இந்த ஊரிலே நமக்கு என்ன வைத்திருக்கிறது? பட்டினத்துக்குத் தான் போய் இருக்கலாமே!” என்று கேட்டாள் தகப்பனாரிடம். பிறந்தது முதல் வளர்ந்து வந்த கிராமத்தை விட்டுப் போவதற்கு வருத்தமாகத்தான் இருந்தது அவளுக்கு.

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு வந்த சுப்பரமணி, என்னம்மா காமு! இந்த ஊரில் இருக்கிற வரைக்கும்தான் உனக்குக் கல்யாண்மாகவில்லை. பட்டினம் போன பிறகாவது சீக்கிரமாக நடக்கட்டும்’ என்று தன் வெள்ளை மனத்துடன் காமுவை ஆசீர்வதித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/84&oldid=682393" இலிருந்து மீள்விக்கப்பட்டது