பக்கம்:பனித்துளி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 85

ஆடம்பரம் இல்லாத ஆடைகளை உடுத்தியிருந்த அவள் தேகத்தில் அதிகமாகத் தங்கம் வைரம் எதுவும் மின்ன வில்லை. கையில் மெல்லிய தங்க வளையல்கள் இரண்டும், கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலியும் பூண்டிருந்தாள். கல்வியின் மேதையால் ஆழ்ந்து ஜ்வலிக்கும் க்ருவிழிகள். மஞ்சள் பூசிக் குளித்த மாதிரி தாழம்பூ நிறம். மரியாதையும் விநயமும் உருவாக உட்கார்ந்திருந்தாள், அந்தப் பெண்மணி.

முதலில் இரண்டு மூன்று ஸ்டேஷன்களை வண்டி

தாண்டுகிற வரையில் அந்தப் பெண்மணி பேசவில்லை. கொட்டுக் கொட்டென்று உட்கார்ந்திருக்கும் காமுவைப் பார்த்து அந்த வாரத்திய தமிழ்ப் பத்திரிகை ஒன்றை எடுத்துக் கொடுத்தாள் அவள். காமு அதை வாங்கிக் கொண்டு, ‘பரவாயில்லை, நீங்கள் படித்துவிட்டுத் தாருங்கள்’’ என்றாள்.

“நான் படித்து விட்டேன்’ என்று பதில் கூறினாள் அந்தப் பெண்மணி. பிறகு மெதுவாகப் பேச ஆரம்பித்த வர்கள் பல விஷயங்களைப் பற்றியும் பேசினார்கள். உயர்தரக் கல்வி பயின்றுவிட்டு அந்தப்பெண், கலாசாலை ஒன்றில் ஆசிரியை வேலை பார்ப்பதாகக் கூறினாள். மாதம் இருநூறு ரூபாய்களுக்கு மேல் சம்பாதிப்பதாகவும், அவளுடைய கணவன் சர்க்கார் வேலையில் இருப்பதாகவும், கல்யாணமாகி ஒரு வருஷம் ஆயிற்று என்றும் கூறினாள். காலேஜ் படிப்பு இல்லாவிட்டாலும் காமு சுமாராகப் படித்து வேலை பார்க்கலாம் என்றும் தைரியம் கூறினாள்.

‘என்னைப் பார்க்க வந்தபோது என் கணவர் வீட்டார். ஆயிரம் ரூபாய் வரதட்சிணை கேட்டார்கள். எனக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. நானும்தான் படித்திருக் கிறேன். எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்களேன்’ என்று அவர்களை நான் திருப்பிக் கேட்டேன்!” என்று கூறிவிட்டு அவள் கலகல வென்று சிரித்தாள். இப்படி ரயிலில் பொழுது போவது தெரியாமல் காமுவும், அந்தப் பெண்ணும் நெருங்கிப் பழகினார்கள். -

ப.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/87&oldid=682396" இலிருந்து மீள்விக்கப்பட்டது