பக்கம்:பனித்துளி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி T 87

கொள்ளுவேன்’ என்று கூறுவது போல் சம்பகமும் நிலாவைப் பார்த்தாள். பிறகு, ‘இன்று காலையில் தான் வந்தேன்’ என்றாள்.

சில நிமிஷங்களில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு |லா வெள்ளித் தட்டிலேயே கை அலம்பி விட்டு எழுந்தாள். உடனே சமையற்கார மாமியைப் பார்த்து, ‘மூன்று மணிக்கு சிவளிமாவுக்குப் போகிறேன் மாமி. அதற்குள் காபி பொட்டு விடுங்கள்’’ என்று கூறி விட்டு, அவள் ஏதாவது தன்னுடன் பேசுவாளா என்று நி ற் கு ம் சம்பகத்தைக் கவனியாமல் மாடிக்குச் சென்று விட்டாள் நீலா. சமையற் அார மாமி ஹூம்’ என்று ஒரு பெருமூச்சு விட்டாள்.

பார்த்தாயாடி அம்மா? தட்டை எடுத்து அலம்பி வைக்கக் கூட உன் ஓரகத்திக்கு ஒழிவில்லை. ஒரு நாளைக்கு ஆறு தடவைகள் முகம் அலம்பிப் பவுடர் பூச ஒழிவிருக்கிறது! இவள் தட்டை அலம்புவதற்காக உன் மாமியாரை ஐந்து ரூபாய் சம்பளம் கூடப் போட்டுத் தரச் சொல்லி கேட்கப் போகிறேன். ஆமாம்!” என்று கோபமாகக் கூறினாள், மாமி.

‘இப்படியும் குடித்தனப் பாங்கு .ெ த ரி ய | ம ல் பெண்களை வளர்க்கிற பெற்றோர்கள் இருக்கிறார்களா? படித்துப் பட்டம் பெற்று சமூக சேவை செய்கிறேன் என்று ஜம்பமாக நாலு பேர் எதிரில் வந்து விடுகிறார்கள் இந்தப் பெண்கள்! அவர்கள் வீட்டைப் போய்ப் பார்த்தால் நாய் கூட அங்கு தலை வைத்துப் படுக்கும் ஸ்திதியில் இருக்காது. மாலையில் களைத்து வீட்டுக்கு வரும் கணவனுக்கு ஒரு கோப்பை தண்ணிர் கொடுப்பதற்கு மனைவி வீட்டில் இருக்க மாட்டாள். அவர்கள் வழியைப் பின் பற்றுபவள் தான் நீலாவும்” என்று ஏதேதோ எண்ணமிட்டாள் சம்பகம். இதற்குள் இடை வேளை சாப்பாட்டிற்காகப் பள்ளிக் கூடத்திலிருந்து வந்த பானு தன் தாயாரிடம் வந்து, ‘அம்மா! சித்தியைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தாயே? அதோ பார் அம்மா, மாடிக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/89&oldid=682398" இலிருந்து மீள்விக்கப்பட்டது