பக்கம்:பனித்துளி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிற்றுளி 89

முடியவில்லை! காபி அருந்திவிட்டு, நீலா சினிமாவுக்குக் கிள பினாள் அவள் சமையற்க்: டைத் தாண்டுவதற்குள் மீனாட்சி அம்மாள் தயங்கிக் கொண்டே அவள் எதிரில் வந்து நின்ற்ாள். பிறகு மென்று விழுங்கிக் கொண்டே, ‘ரணம் மா சங்கரனும் வருகிறானோ உன்னொடு சினிமா விற்கு?’ என்று கேட்டாள்.

‘நான் ஒன்றும் அவரை வரச் சொல்ல வில்லையே? இl, க வீட்டிலே பொழுது போகவில்லை எனக்கு! கிடீரென்று நினைத்துக் கொண்டேன், புற ப் பட் டு விட்டேன்’ என்றாள் நீலா.

தமிழ் நாட்டில் மாமியார் ஸ்தானம் வகிக்கும் எந்தப் பெண்மணியும் நாட்டுப் பெண் தன் கணவனிடம் கூடக் கூறாமல் வெளியில் போவதை ஆட்சேபிக்காமல் இருக்க மாட்டாள். மீனாட்சி அம்மாளின் முகம் ஜிவுஜிவு என்ற சிவந்தது. யோசித் கக் கொண்டே நிற்பவளை மதிக்காமல் நீலா விடுவிடு என்று நடந்து தெருக் கதவைத் திறந்து கொண்டு போய் விட்டாள். நிமிர்ந்து பார்க்கும் மீனாட்சி அம்மாளின் எதிரில் ருக்மிணிதான் நின்றுகொண்டிருந்தாள்! ‘பார்த்தாயாடி!’ என்று அதிசயத்தோடு பெண்ணைக் கேட்டுவிட்டு மீனாட்சி அம்மாள் மோவாயில் கையை வைத்துக் கொண்டு நின்றாள்.

“பார்க்கிறேனே அந்த வேடிக்கையை தினமும்தான்! சங்கரனை அவள் ஒரு சொல்லாக் காசுக்குக் கூட மதிக்க மாட்டாள். ஆமாம், சொல்லி விட்டேன். இப்பொழுதே அவனிடம் சொல்லி. கொஞ்சம் கண்டித்து வைக்க வேண்டும் ஆமாம்’ என்றாள் ருக்மிணி. *

தாய்க்கும். மகளுக்குள் இடையில் மறுபடியும் சர்மா வந்தார். வீட்டிலே இன்னும் கொஞ்ச நாளைக்குள் ஏற்படப் போகும் புயலின் அறிகுறிகள் ஏற்கெனவே தோன்ற ஆரம்பித்திருப்பதாகத்தான் அவர் நினைத்தார். கையில் சதா பகவத் கீதையை வைத்துக் கொண்டு வேதாந்த விசாரணையில் அவர் மூழ்கி இருப்பதால் புயலையும், அமைதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/91&oldid=682401" இலிருந்து மீள்விக்கப்பட்டது