பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 - இவ் விரேவனசித்தர் திருமேற்றவபபுராணம, தருவலகுசழிப் புராணம் திருப்பட்டீச்சுரப் புராணம் என்னும் மூன்று :புராணங்கள் இயற்றியவரென்பது:

  • பவமறத் தெளிந்த சிவதரி சனத்தோன் திருமேற் றளிக்குச் செழுந்தமிழ்ப் புராணம் தெசிதரு சிதம்பர ரேவன சித்தன்” . ' வர மிகு வலஞ்சுழி வாணர்தம் புராணமும் உரைதரு ரேவனன் . "திருப்பட் டீச்சுரச் செந்தமிழ்ப் புராணம் தெரிந்தநற் சிதம்பர ரேவனன்’’. என்னும் அடிகளிற் கண்டு கொள்க. திருமேற்றளியென்பது காஞ்சிப்பிரதேசத்தைச் சார்ந்தது. திருவலஞ்சுழியும், திருப்பட்டீசுவரமும் i.

கும்பகோணத்துக்குப் பக்கத்திலுள்ள சிவஸ்தலங்களாம். இவையன்றி 'சிவஞானதீபம் என்னும் சைவசமய கிரந்தமொன்றும், இவராற் செய்யப்பட்டதென்று தெரிகிறது. இந்நூல் சுபாது வருவடிம் பகிப்பிக்கப்பட்டது. எ. ஆசிரிய நிகண்டு இனி. இந் நிகண்டுகளிலெல்லாம் பிற்பட்டது ஆசிரிய நிகண்டு. இஃது ஆசிரிய விருத்தத் தால் அமைந்தமையின் அப்பெயர் பெற்றது. இஃதியற்றியவர் தொண்டை மண்டலத்துச் செஞ்சிச் சீமையைச் சார்ந்த ஊற்றங்காலில், பாவாட்ை வாத்தியார் குமாரர் ஆண்டிப் புலவர் என்பார். இப்புலவர், இந்நிகண்டுடன், நன்னுாற்கு ஒர் உரையும் இயற்றியவரென்றும் தெரியவருகிறது. இச் சங்கத்துப் புத்தகசாலையில் சங்கர.நமச்சிவாய ருரையல்லாத வேருே i உரைப்பிரதியுமுண்டு: ஆல்ை அதுவே இந்நிகண்டுடையார் செய்தவுரையென்பது துணியக்கூடவில்லை. இவர் நன்னூற்கு முரைசெய்தவரென்பதை ஆசிரிய நிகண்டுப் பாயிரத்தில்வரும், 'இயம்பிய நிகண்டினு மறியன்னுாலிளுெ டிரண்டுமே செய்து வைத்தான்' என்னுந் தொடரால் அறிக. இந் நிகண்டின் முதலிரண்டு தொகுதிகள் சில வருடங்களுக்கு முன்பு அச்சிடப்பட்டன. o இவ்வாறு வழங்கும் ஏழு நிகண்டுகளையன்றி வேறு சில நிகண்டுகளும் இந்நாட்டில் வழங்கலாம். ஆளு ைல் பிரசித்தமானவை மேற்காட்டிய நூல்களாகும். ஐந்தினை நிகண்டு என்பதொன்றுள்ளதாகக் கேள்விப்பட்ட்துண்டு. இந் நிகண்டுகளெல்லாம் பெரும்பான்மை வழக்கு வீழ்ந்தனவாயினும், தமிழர்க்குப் பெரிதும் அலங்காரந் தருவனவாதலின் அவற்றின் வரலாறுகளை எழுத த் துணிந்தேன். எண்ணத்திலடங்காத செய்திகள் பல இவற்றைக் குறித்திருத்தல் கூடும். அவையெல்லாம் அறிந்தவர்வாய்க் கேட்டு மகிழ்ந்து கொள்க.