பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鲑

இரண்டாம் நூற்ருண்டு முதல் 12-ம் நூற்ருண்டு வரை தமிழர்களது வாழ்க்கை எத்தன்மையதாக இருந் தது, எவ்வித குறிக்கோள்களுடன் அவர்களுள் பெரி யவர் என்று போற்றப்பட்டவர்கள் வாழ்ந்துவந் தார்கள், அவர்கள் நாகரிகத்தின் பண்பு என்ன என்று அறிய விரும்புபவர்களுக்குத் திருமுறை உறுதுணையாகும். தமிழ்நாட்டின் மன்னர், மக்கள், புலவர், சமயங்கள் முதலியவற்றைப்பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் வரலாற்று ஆசிரியர்களுக்கும் மான வர்களுக்கும் திருமுறை சிறந்த விளக்காகும்.

இவ்வாறு பலவகையான சிறப்புக்களே யும் தன்ன கத்தே கொண்ட திருமுறையைப்பற்றிய கேள்விகள் பலவற்றிற்குத் தெளிவான விடைகள் கூறுவதற்கு உ த வு ம் ஆராய்ச்சி தமிழ்நாட்டில் தேவையாக இருந்தது. அக்குறையை நிறைவேற்றுவது அண்ணு மலேப் பல்கலைக்கழத் தின் கடமைகளில் ஒன்ருயிற்று. பல்கலைக்கழகத்தின் தமிழ் ஆராய்ச்சிப் பகுதியினரால் அவ்வாராய்ச்சி செய்யப்பட்டு அதன் பயனுய் இந்நூல் வெளிவருகிறது.

திருமுறை வரலாறு என்னும் நூலின் முதல் பகு தி இது. திருமுறை எப்பொழுது, யாரால், எந்தச் சூழ்நிலையில், வகுக்கப்பட்டுத் தொகுக்கப்பெற்றது முதலிய கேள்விகள் இந்த பாகத்திற்கும் அடுத்துவரும் இரண்டாம் பாகத்திற்கும் பொதுவானவை. அவை முதற்கண் ஆராயப்படுகின்றன. அதன்பின் இந்தப் பாக த்தில் பன்னிருதிருமுறைகளுள் முதல் ஏழு திரு முறைகளே ப் பற்றிய ஆராய்ச்சியும், ஆராய்ச்சியின் முடிவுகளும் விளக்கப்படுகின்றன.

பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறை களே அருளிச் செய்தவர் திருஞான சம்பந்த சுவாமி உள் ஆவர். 4, 5, 6 திருமுறைகளே அருளிச் செய்தவர்