பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

பன்னிரு திருமுறை வரலாறு


திருநெறிய தமிழாகிய சைவத் திருமுறைகளுள் நான்கு, ஐந்து, ஆருந் திருமுறைகளைத் திருவாய் மலர்ந்தருளிய அருளாசிரியர் திருநாவுக்கரசராவர். ஆளுடைய அரசராகிய இப்பெருந்தகையார், எஞ் ஞான்றும் திருத்தகவிற்ருகிய பேரின் பத்தைத் தன் அடி யார்களுககு வழங்கவல்ல சிவனெனு நாமந் தனக்கே யுடைய செம்மேனியம்மாளுகிய இறைவனேயே சிறப் பீனுஞ் செம்பொருளாகக் கொண்டொழுகிய தெளிந்த சிந்தையுடையவராவர். இச் செய்தி.

'சிவனெனும் ஒசை யல்ல தறையோ வுலகில்

திருநின்ற செம்மையுளதே?

இான வரும் இவரது வாய்மொழியாலும்,

  • திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன்றன் அடியார்க்கும் அடியேன்”

என நம்பியாரூரர் இவரைப் பாராட்டிப் போற்றுத் திருத்தொண்டத்தொகைத் தொடர் மொழியாலும் இனிதுவிளங்கும்.

நம்பியாண்டார் நம்பி, திருத்தொண்டத் தொகை வின் வகையாகத் தாம் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியிலும் திருநாவுக்கரசு தேவர் திருவே காதச மாலேயென்னும் பனுவலிலும் திருநாவுக்கரசரது. வரலாற்றிலுள்ள அற்புத நிகழ்ச்சிகள் சிலவற்றையும் அவர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களின் சிறப்பினேயும் திருநாவுக்கரசு’ என்னும் திருப் பெயரை மந்திரமாகக்கொண்டு ஒதி அவரை வழிபடும் மெய்யடியார்கள் அடையும் பெரு நலங்களேயும் விரித் துரைத்துப் போற்றியுள்ளார். திருக்தொண்டத்தொ கையின் விரியாகச் சேக்கிழாரடிகள் பாடிய திருத்