பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு #95

திருநாவுக்கரசரைக் கொல்லாது வணங்கி வலம் வந்து திரும்பிய பட்டத்துயானேயைப் பாகர்கள் மீண்டும் அங்குசத்திற்ைகு த்தி அவர் மேற் செலுத் தினர். அப்பொழுது அவ்யானே உடன் வந்த பாகர் களைக் கொன்று வீழ்த்திச் சமணர்கள் மேற்சென்று அவர்களிற் சிலரை மிதித்து வருத்தி அங்குள்ளோர் யாவர்க்குந் தீராக்கவலேயை யுண்டாக்கிற்று. அங்கி ருந்து ஒடித் தப்பிப்பிழைத்த சமணர்கள், மானமிழந்து வருந்தி மன்னனே யடைந்து தருமசேனன் என் டான், நம் சமயத்திலிருந்து கற்றுக்கொண்ட மந்திர வலியி ஞலே நாம் ஏவிய யானையைக்கொண்டே நம் வலிமை யைச் சிதைத்து மன்னகிைய நினது புகழுக்கும் இழி வினையுண் டாக்கினன்’ எனக் கூறிப் புலம்பிஞர்கள், அரசன் சினமுற்று இனி அவனுக்குச் செய்தற்குரிய தண்டனே யாது’ என வினவிஞன். அது கேட்ட சமணர்கள் அவனைக் கல்லொடு சேர்த்துக் கயிற்றி குற் கட்டிக் கடலில் தள்ளுக’ என்றனர். அக்கொடுத் தொழிலுக்கு உடன்பட்ட பல்லவன், கொலேத் தொழி லாளரை நோக்கித் தீங்கு புரிந்த தருமசேன னக் காவலொடும் கொண்டு சென்று கருங்கல்லோடு சேர்த் துக் கயிற்ருற் பிணித்துப் படகிலேற்றிச் சென்று கடல் நடுவே தள்ளிவிடுங்கள்’ எனக் கட்டளையிட்டான். அரசனது ஆணேயினே மேற்கொண்ட ஏவலாளர், சமணர்கள் தம்முடன் வர அரசன் பணித்தவண்ணம் திருநாவுக்கரசரை அழைத்துச்சென்று கல்லோடு பிணித்துப் படகிலேற்றிக் கடல் நடுவிலே தள்ளி விட்டுத் திரும்பினர்கள் உறைப்புடை மெய்த் தொண்டராகிய திருநாவுக்கரசர், ‘எப்பரிசாயினும் ஆக இறைவனே யேத்துவேன்’ என்னுங் கருத்துடைய ராய்ச் சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந் தெழுத்தினைத் துதிப்பார்,

சொற்றுனே வேதியன் சோதி வானவன் பொற்றுனேத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணேப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுனேயாவது நமச்சி வாயவே.