பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

பன்னிரு திருமுறை வரலாறு


யாக்கையுடனேயே தேவர்களாலும் சென்று சேர்தற் கரிய திருக்கயிலாயத்தை அடைந்து மாதொருபாக ராகிய சிவபெருமானேக்கண்டுபோற்றி அப்பெருமானது திருவருளின் பத்தில் திசேத்து மகிழ்ந்தார்களென்பது,

ஞானவாரூரரைச் சேரரையல்லது நாமறியோம் மாணவ ஆக்கையொ டும் புக்க வரை, வளரொளிப்பூண் வானவராலும் மருவற்கறிய வடகயிலே க் கோனவன் கோயிற் பெருந்தவத்தோர் தங்கள்

கூட்டத்திலே, என வரும் திருத்தொண்டர் திருவந்தாதியாலும்,

களேயா வுடலோடு சேரமான் ஆரூரன் விளையா மதமாரு வெள்ளானே மேல் கொள்ள ’

எனவரும் திருவிசைப்பாவிலுைம் நன்கு வலியுறுத்தப் பெறும் மெய்ம்மை வரலாருதல் அறிந்து மகிழத்தகுவ தாகும்.