பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் 365

மத்தவிலாசப் பிரஹசனம் என்ற வடமொழி நாடகத் தில் தன் காலத்தில் நிலவிய பாசுபதம், காபாலம், புத் தம் ஆகிய சமயங்களே மேற்கொண்டொழுகிய மக்களே இழித்துக் கூறியுள்ளான் இந்நாடகத்தில் சமண சமய மக்களே இவ்வாறு இழித்துரையாமையால் இவன் இதனே இயற்றிய காலத்தில் சமண சமயச் சார்புடைய வகை இருந் திருத்தல் வேண்டுமென்பது திண்ணம்.

திருச்சிராப்பள்ளிக் குன்றின் மேலுள்ள உச்சிப் பிள்ளேயார் கோயிலுக்குப் பின்புறத்தி லமைந்த சமன முனிவர்களின் கற்படுக் கைகளி லொன்றில் முதல் மகேந்திரவர்மனுடைய சிறப்புப் பெயர் பொறிக்கப் பட்டிருத்தலால் அவ்வேந்தன் சமண சமயத்துறவி களே ஆதரித்தவனென்பதும் அச்சமயத்தின் வழி ஒழுக விரும்பியவனென்பதும் நன்கு தெளியப்படும். கி. பி. ஏழாம் நூற்றண்டின் முற்பகுதியில் தொண்டை நாட்டையும் சோழ நாட்டையும் ஆட்சி புரிந்த பல்லவ நவந்தகிைய இம் மகேந்திரவர்மனே திருச்சிராப் ள்ேளிப் பெருங்குன்றை குடைந்து அங்கே சிவபெருமா னுக்குத் திருக்கோயில் ைமத்தவனென்பது ஆராய்ச்சி யாற் புலனுகின்றது. வடமொழியிற் பெரும் புலமை பெற்று விளங்கிய இவ்வேந்தன், தான் நிறுவிய திருச் சிராப்பள்ளித் திருக்கோயிலில் வடமொழிச் சுலோகங் கள் சிலவற்றைப் பொறித்துள்ளான். தான் புறச் சமயத்திலிருந்து திரும்பிச் சிவநெறியைக் கடைப்பிடித் துச் சைவகிைய தன்மையையும் திருச்சிராப்பள்ளிக் குன்றின்மேல் அமைத்த குகைக்கோயிலிற் சிவ

1. 1938-ம் ஆண்டின் தென்னிந்தியக் கல்வெட் டறிக்கை, 2-ம் பகுதி 3-ம் பாரா , செந்தமிழ் 45-ம் தொகுதி பக் 80 - திருச்சிராப்பள்ளி என்னும் தலைப்புடைய

2. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 1, 33, 34-ம்

கல்வெட் டுக்கள்.