பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஆசிரியர் காலம் 393

திருமுறைகண்ட புராணம் கூறிய செய்தி முன்னரே விளக்கப் பெற்றது. அப்பரும் சம்பந்தரும் வாழ்ந்த காலப் பகுதியை யடுத்துத் தொண்டைநாட்டினே ஆட்சிபுரிந்த வேந்தன் இராசசிங்க தைலின் அவனே சுந்தரர் காலத்துப் பல்லவன் காடவர்கோன் கழற் சிங்களுதல் வேண்டுமென்பது இக்குறிப்பினுல் மேலும் உறுதி பெறுதல் காணலாம். தேவார ஆசிரியர் மூவரும் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களிற் பெரும் பாலன சிதலரிக்கப்பட்டு மறைந்துபோயின என்ற செய்தி திருமுறை கண்ட புராணத்திற் கூறப்பட்டிருத் தலால் சுந்தரர் தேவாரமாக இப்பொழுது வழங்கிவரும் பதிகங்களைத் தவிரக் கயிலாச நாதர் கோயில் முதலிய பிற தலங்களைக் குறித்துச் சுந்தரர் திருப்பதிகம் பாட வில் லேயெனக் கூறுதல் திருமுறை கண்ட வரலாற்றிற்கு முற்றிலும் முரணு மென் க.

கழற் சிங்கன் வடபுலங்கவர்ந்து திறைகொணர்ந்த பெருவீரன் எனச் சேக்கிழார் கூறும் வரலாற்றுக் குறிப்பு தெள்ளாறெறிந்த நந்திவர்மனுக்கு ஏற்புடைய தாக இல்லே. மேலேச் சளுக்கியணுகிய வடபுலவேந்தனே அமரில் வென்ற புகழுடைய இராசசிம்ம பல்லவ னுக்கே இச்செய்தி மிகவும் பொருந்துவதாகும். அன்றி யும் இவனுடைய சமகாலத்தரசனுகிய கோச்சடையன் ரனதிரன் என்னும் பாண்டியன் மங்கல புரத்தில் மாரத ைரப் பொருதழித்த புகழுடையானென்பதை வேள்விக்குடிச் செப்பேடுகள் விளக்கிக் கூறுகின்றன . மங்கலபுரப் போரில் பாண்டியனுக்குத் தோற்ருேடிய வன் மேலேச் சளுக்கிய வேந்தன் முதல்விக்கிரமாதித்த கை இருத்தல் வேண்டு மென்பது வரலாற்ருராய்ச்சி

1. பெரிய. கழற்சிங்க நாயனுர் புராணம் 2-ஆம்

செய்யுள். 2. மங்கலபுரம் என்பது திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் கொள்ளிடத்திற்கு வடகரையிலுள்ள மங்கலம் என் னும் ஊர். (பாண்டியவர் வரலாறு பக் 46)