பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் திருத்தாண்டகத்தில் அடிதோறும் மூன்று, நான்கு, ஏழு, எட்டாஞ் சீர்களே விலக்கி ஏனேய நான்கு சீர்களேயும் இணைத்து நோக்கினல்,

வண்ணங்கள் தாம்பாடி வலிசெய்து வளே கவர்ந்தார் கண்ணம்பால் நின்றெய்து கடியதோர் விடையேறிச் சுண்ணங்கள் தாங்கொண்டு தோலுடுத்து நூல்பூண்டு அண்ணலார் போகின்ருர் அழகியரே ஆமாத்துனர்.

என்ற கொச்சகக் கலிப்பாவின் உருவம் வந்து எய்தும். எனவே நாற்சீரடியால் வரும் கலிப்பா அடிதோறும் இடையிலும் ஈற்றிலும் இவவிரண்டு மாச்சீர்களேப் பெற்று வருதலால் அமைந்த எண் சீரடி யாப்பு இத் தாண்டகப்பாவுக்கு உரியதென்பது நன்கு புலம்ை.

இவ் யாப்பு, ஆசிரியர் தொல்காப்பியரை எல் ஒற்றும் குற்றுகரமும் நீக்கி நாலெழுத்து முதல் இருபதெழுத் தீருக வகுத்துரைக்கப்பட்ட பதினேழு நிலத்து ஐவகை யடிகளிலும் கழிநெடிலடிக்கு உரிய மேலெல்லே யாகிய இருபதெழுத்தென்னும் வரையறையைத் தாண்டி இருபதின் மேற்பட்ட எழுத்தால் மிக்குவருதலின் தாண்டகம் என்னும் பெயர்த்தாயிற்று. தேவாரத் திருப்பதிகங்களில் இருபதெழுத்தென்னும் இவ்வரை யறையைக் கடந்து வருவன பிறவும் உளவேனும் அவையனைத்தும் பண்னெடு கூடிய இசைப்பாடல்க ளாதலின் இயல்வகை குறித்த தாண்டகம் என்னும் இப்பெயரினேப் பெருவாயின.

இனி, வடமொழியில் தண்டகம் என வழங்கும் செய்யுள் விகற்பமே தமிழில் தாண்டகம் என வழங்குவ தாயிற்றெனக் கருதுவாரும் உளர். அன்னுேர், தமது கருத்துக்கு ஆதாரமாக யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியர் வடமொழி யாப்பிலக்கண விதிகள் சில வற்றை அப்படியே தமிழிலும் மேற்கொள்ளும் முறை