பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

பன்னிரு திருமுறை வரலாறு


செய்யுட்கள் தண்டகம் என்னும் வடமொழிச் செய்யு னிலக்கணத்தினே அடியொற்றிப் பிற்காலத்தில் இயற் றப்பட்ட பு து வ ைக ச் செய்யுட்களாகும். தொல் காப்பியச் செய்யுளியலின் படி செய்யுட்களுக்கு எழுத் தெண்ணி அடிவகுக்குமிடத்து ஒற்றும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் நீக்கி எண்ணுதல் மரபு. வடமொழி யில் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆகிய இச்சிறப் பொலிகள் இல்லாமையால் இவற்றை நீக்கி எழுத் தெண்ன வேண்டுமென்ற வரையறை எழுதற்கு இட மில்லாதுபோயிற்று. குற்றியவிகரம், குற்றியலுகரம் என்ற ஒலி நுட்பங்களேக் கருதாது அமைக்கப்பட்ட வடமொழி யாப்பமைதியினே மேற்குறித்த ஒலி நுட்பங் கள் பெருக வழங்கும் தமிழ்ச் செய்யுட்களுக்கு ஏற்றி யுரைத்தல் ஒரு சிறிதும் ஏற்புடையதன் ரும். எனவே தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை அடியொற்றி யமைந்த திருத்தாண்டகப்பாவும் வ ட மொ ழி த் தண்டக யாப்பினே அடியொற்றிப் புதியன புனைந்த யாப்பருங்கல விருத்தி உதாரணச் செய்யுட்களும் இலக்கண வகையால் தம்முள் வேறுபட்டன என உணர்தல் வேண்டும்.

தமிழ்ச் செய்யுள் வகையாகிய இத்தாண்டக மென்னும் யாப்புக்கு மூல இலக்கியமாக விளங்குவன திருநாவுக்கரசர் பாடிய இத்திருத்தாண்டகப் பாடல் களேயாகும். இத்திருப்பதிகங்களே மு த ன் மு. த ல் அருளிச்செய்தவர் அப்பரடிகளாதலின் அப்பெருந் தகையாரைத் தாண்டகச் சதுரர்’ ’ எனவும் தாண் டகவேந்தர்’ எனவும் போற்றுவர் பெரியோர்.

1. தொல் - செய்யுளியல் 44 பேராசிரியர் உரை.

2. தாண்டகச் சதுரராகும் அலர் புகழரசும் - பெரியகுங்குலிய-32 3, நால்வர் நான்மணி மாலே,