பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602

பன்னிரு திருமுறை வரலாறு


என முல்லேப்பண்ணுக்குக் கோடிப்பாலே கொண்டது மன்றி அது தாரமும் உழையும் கிழமைகொளும் எனவும் கூறியிருத்தலால், கரகரப்பிரியா ராகத்தினைக் காந்தார நிஷாத சுரங்கள் அம்ச சுரமாகக்கொண்டு பாடுமிடத்துச் செவ்வழிப் பண்ணின் உருவம் தோன் றும் என்பர் யாழ்நூ லார். செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகங்களைப் பிற்காலத்தார் எதுகுல காம்போதியிற் பாடுதலே மரபாகக்கொண்டனர்.

17. தக்கராகம்

பாலேப்பெரும்பண்ணில் தோற்றிய அராகம் என் னும் திறத்தின் அக நிலையாய்ப் பண்வரிசையில் 17 என்னும் எண்பெற்று நிற்பது தக்க ராகம். இது முதல் திருமுறையில் 23 முதல் 46 வரையுள்ள பதிகங் களிலும், ஏழாந் திருமுறையில் 13 முதல் 16 வரை யுள்ள பதிகங்களிலும் அமைந்துள்ளது.

டக்க என்னும் இராகமானது, சட்ஜ, மத்யமா, தைவதி என்னும் ஜாதிராகங்களிலே தோன்றி, அற்ப பஞ்சம முடையதாய், சட்ஜ சுரத்தை முதல் முடிவு கிழமையாகப் பெற்றுக் காகலி அந்த ரங்களோடு கூடி வருவது; ஆத்ய மூர்ச்சனேயினேக் கொண்டது; உருத் ரருக்கு உவந்தது; கார்காலத்திற்கு உரியது; பெரு மிதம் மருட்கை வெகுளி என்னும் சுவைகளையுடையது; போர் வீரைெடு தொடர்புடையது ' என்றும், ‘டக்க ராகத்தின் விபாஷையாகிய தேவார வர்த்தநீ பஞ்சம அம்சம், பஞ்சம கிரகம், சட்ஜ நியாசம் உடையது; சம்பூரணமானது ' என்றும் சாரங்கதேவர் கூறுவர், இதன் ஆளத்தியினே நோக்குமிடத்து, ரிஷபம் நீங்கி யும் பஞ்சமம் (ஒருமுறை மாத்திரம் தோற்றி) அற்ப மாகவும் நிற்றல் புலனம். மத்திய மக்கிராமத்து செளவீசி' என்னும் மூர்ச்சனேயினே ஆத்ய மூர்ச்சனை