பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636

பன்னிரு திருமுறை வரலாறு


தற் கடவுளாகிய நான்முகனும் காத்தற் கடவுளாகிய திருமாலும் தாம் தாம் பெரியர் எனத் தம்முள் மாறு கொண்டு அன்னமாகியும் ஏனமாகியும் இறைவனது முடியும் அடியும் தேட முயன்று பெரிதும் அல்லற். பட்டுக் காண முடியாது பின் இறைவனது திருவருளால் திருவைந்தெழுத்தே தி யுய்ந்த செய்தியை உணர்த்து வது ஒன்பதாந் திருப்பாட்டு, வேதநெறி சைவநெறி களேப்பழித்துரைக்கும் புறச்சமயத்தார்களாகிய சமணர் புத்தர் ஆகியோர் தெய்வம் உண்டு என்னும் தெளிவான ஞானமில்லாதவராதலின், அன்னேர் கொண்ட நெறி கள் அவர்க்கும் பிறர்க்கும் பயன்படாது பழி விளேக்குங் குற்றமுடையனவே என்பதனே எடுத்துரைப்பது பத்தாந் திருப்பாடலாகும்.

இங்ங்ணம் ஒவ்வொரு திருப்பதிகத்தினேயும் பத்துப் பத்துப் பாடல்களால் நிறைவித்த ஆளுடைய பிள்ளே யார், அத்திருப்பதிகங்களேப் பத்தியுடன் பயின்று பாடும் உலகமக்கள் அடையும் நற்பயன்களை விளக்கும் முறையில் பதிகத்தின் கடைசித் திருப்பாடலாகப் பதினேராம் பாடலே அமைத்துள்ளார். இவ்வாறு பதிக ந் தோறும் அவ்வப்பதிகப் பயன் கூறும் முறையிற் பாடி யருளிய திருப்பாடலைத் திருக்கடைக் காப்பு’ என்ற பெயராற் சேக் கிழாரடிகள் குறித்துள்ளார். பதிகங் களின் இறுதியிலுள்ள திருக்கடைக்காப்புச் செய்யுட்கள் அவ்வப்பதிகங்களைப் பாடுவோராய அன்பர்களுக்குச் சிறிதும் இடர்நேராமற் காக்கும் அருள் நோக்கத்துடன் திருஞானசம்பந்தரால் அருளிச் செய்யப்பெற்ற திரு வுடைய செழும்பாடல்களாதலின் திருக்கடைக்காப்பு என வழங்கப்பெறுவனவாயின.

இலங்கையர் மன்னகிய இராவணன் அளகை வேந்தகிைய குபேரனே வென்று அவனிடமிருந்து