பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660

பன்னிரு திருமுறை வரலாறு


  • பொடியுடைமார்பினர் போர்விடையேறிப் பூதகணம்

புடைசூழக் கொடியுடை யூர்திரிந் தையங் கொண்டு பல பல கூறி வடிவுடை வானெடுங் கண்ணுமையாக மாயவன்

வாழ்கொளிபுத்துார்க் கடிகமழ் மாமலரிட்டுக் கறைமிடற்ருனடி காண்பாம் ?

[1–40–4]

எனவும் வரும் திருப்பதிகங்கள் முதலாவின இவ்வகை யைச் சேர்ந்தனவாகும்.:

11. ஒரு தலத்தை வழிபட்டுத் திரும்பும் நிலையில் அங்கே கண்ட தெய்வக்காட்சியினே த் தம் உள்ள த்தே நினைவு கூரும் முறையில் அருளிய திருப்பதிகமும் உண்டு.

  • சந்தமா ர கிலொடு சாதிதேக்கம் மரம்

உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்

மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி

எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே (3.36-1}

என வரும் திருப்பதிகம் இங்கு நோக்கத்தக்கதாகும்.

12. ஆளுடையபிள்ளே யார் அடியார் குழாத் துடன் ஒரு தலத்திலிருந்து ம ற் .ெ ரு ரு த ல் த் ைத நோக்கிச் செல்லும் நிலையிற் பாடிய திருப்பதிகங்கள் வழிநடைக் கேற்ற சந்தத்தில் அமைந்துள்ளன.

நம்பொருள் நம்மக்களென்று நச்சியிச்சை செய்து நீர் அம்பர மடைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம் உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை நம்பன் மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே ?

£2-97-1} என்ருற்போல்வன இங்கே குறிப்பிடத்தக்கன வாகும்.'

--عت۔ہم کہ:

& ág5gpçopo I 74, II 111, III 25, 42, 46. 1. திருமுறை 99, 100, 101,-ஆம் பதிகங்கள் பார்க்க