பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/805

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

788 பன்னிரு திருமுறை வரலாறு

ஆசிரியர் திருவள்ளுவர், மயக்கத்தினே மருள்? என்று வேருேர் சொல்லால் வழங்கியிருத்தலால், அதனின் வேருக இருள் என்ற சொல்லாற் குறிக்கப் பட்டது, மயக்கமாக இருத்தல் இயலாது. புறத்தே காணப்படும் யூத இருளானது, கண்ணுல் ஒரு பொருளேயும் காணமுடியாத நிலேயிற் பொருள்களின் உருவத்தை மறைத்து நிற்பது. இவ்வாறே உயிர் களின் அகத்துனர்வாகிய அறிவுக்கண்னே மறைத்து நிற்பதாகிய இருளொன்று உண்டென்பதும், அகவிரு ளாகிய அது, தன் தன்மை யிதுவென உயிர்கள் உணராதபடி அவற்றின் அறிவினே மறைத்து நிற்ற லால், ஆன்மாவாகிய பொருளே யுங் காட்டாது அதனே மறைத்துள்ள தன்னேயுங்காட்டாது நிற்குந் தனித் தன்மை யுடையதென்பதும்,

ஒருபொருளுங் காட்டாது இருள் உருவம் காட்டும்; இருபொருளுங் காட்டாது இது (திருவருட்பயன்-23)

என உமாபதி சிவாசாரியார் இருள்மலமாகிய ஆணவ மலத்தின் இயல்பினே எடுத்துரைத்தலால் இனிது புலனும். இங்ங்னம் ஆன்மாக்களின் அறிவினே அநாதியே மறைத்து நிற்ப தொன்றையே ஆசிரியர் திருவள்ளுவர் இத்திருக்குறளில் இருள் என வழங்கி யிருத்தல் வேண்டும். ஈண்டு இருள் என்றது ஆணவமாகிய இருள் மலத்தையே என வும், பொருள்” என்றது, அம் மலவிருளே நீக்கி உ யி ர் க ளு க் கு நல்லுணர்வளிக்கும் அருள் ஞானமாகிய மெய்யுணர் வினேயே எனவும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலிய சிவநெறிச்செல்வர்கள் இத்திருக்குறளுக்குப் பொருள் கண்டுள்ளார்கள்.

பிறவித் துன்பத்திற்குக் காரணமாய் அநாதியே உயிர்களைப்பற்றி நின்று இருவினையிற் புகுத்தி இடர் விளேக்கும் இருளாகிய மலமறைப்பினின்றும் விடுபட்டு