பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/912

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

894

பன்னிரு திருமுறை வரலாறு


தேவார ஆசிரியர் காலத்தில் சோழமண்டலத் திற்கும் தொண்டை மண்டலத்திற்கும் நடுவே வட வெள்ளாற்றிற்கும் சேயாற்றிற்கும் இடையேய ைமந்த திலப்பரப்பு திருமுனைப்பாடி நாடு என ஒரு தனி ந | ட க க் கொள்ளப்பட்டது. இந்நிலப்பகுதியை ஆட்சி புரிந்த குறுநில மன்னர்கள் முனையரையர்' என அழைக்கப்பெற்றனர். சுந்தரர் காலத்தில் தி ரு மு னே ப் ப டி நாட்டை ஆண்ட குறு நில மன்னர் நரசிங்க முனையரையராவர் திருநாவலூரைத் தலைநகராகக் கொண்ட திருமுனைப்பாடி நாட்டினேயும் அதன் மேற்றிசையெல்லேயில் திருக்கோவலூரைத் தலே நகராகக் கொண்ட சேதிநாட்டினேயும் பின்னுள்ளோர் 'நடுநாடு’ என ஒரு நாடாக அடக்கிக் கூறினர்.

இனி, தமிழகத்தையொட்டிய புறநாடாகிய துளு நாட்டில் திருக்கோகரணம்’ என்ற தலமும், தமிழ் நாட் டின் த்ென்னெல்லேயை யொட்டிக் கடலின் நடுவே பமைந்த இலங்கைத் தீவின் பகுதியாகிய ஈழநாட்டில், மாதோட்டக் கேதீச்சரம், திருக்கோணுமலே என்னும் இரு தலங்களும் தேவார ஆசிரியர்களாற் பாடிப் பரவப் பெற்றுள்ளன. தமிழ் நாட்டின் வட எல்லேயாய் விளங் கும் வேங்கடத்தின் வடக்கே இமயம்வரை அமைந் துள்ள திருத்தலங்களை 'வடநாட்டுத்தலங்கள்’ என வழங்குதல் மரபு.

தேவார ஆசிரியர்களாற் போற்றப்பெற்ற திருத் தலங்களேப் பாடல் பெற்ற தலம்’ எனவும். வைப் புத்தலம்’ எனவும் இருவகையாகப் பிரித்துரைத்தல் மரபு. ஒவ்வொரு தலத்தினேயும் தனித்தனியே பரவிப் போற்றும் முறையில் தமத்கெனத் தனித் திருப்பதிகத் தினேப் பெற்ற தலங்கள் பாடல் பெற்ற தலங்கள்’ என வழங்கப் பெறுவன. இவ்வாறு தமக்கெனத் தனிப் பதிகத்தினைப் பெருது பிற தலத்திற்குரிய பதிகப் பாடல் களிகோ அன்றிப் பொதுப் பதிகங்களிலோ பெயரளவிற்